இறங்கி அடிச்ச லாவா.. கதறும் சீன நிறுவனங்கள்.. ரூ.9,499 போதும்.. 50MP கேமரா.. 128GB மெமரி.. எந்த மாடல்?
இந்திய நிறுவனமான லாவா புதிய லாவா யுவா 5ஜி (Lava Yuva 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய போன் குறைந்த விலையில் 50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
லாவா யுவா 5ஜி அம்சங்கள் (Lava Yuva 5G Specifications): 6.5-இன்ச் எச்டி பிளஸ் 2.5டி கர்வ்ட் டிஸ்பிளே (2.5D curved display) வசதியுடன் இந்த லாவா போன் வெளிவந்துள்ளது. மேலும் 1600 × 720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் யுனிசாக் டி750 6என்எம் (Octa-Core Unisoc T750 6nm) சிப்செட் உடன் புதிய லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன் ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
மாலி - ஜி57 எம்பி2 ஜிபியு (Mali-G57 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்(Side-mounted Fingerprint Scanner) வசதியும் இந்த போனில் உள்ளது.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மிஸ்டிக் கிரீன் (Mystic Green) மற்றும் மிஸ்டிக் ப்ளூ (Mystic Blue) நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் லாவா யுவா 5ஜி போனின் எடை 208 கிராம் ஆகும். பின்பு இந்த போனில் எப்எம் ரேடியோ ஆதரவும் உள்ளது.
4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட லாவா யுவா 5ஜி போனின் விலை ரூ.9,499-ஆக உள்ளது. பின்பு இதன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.9999-ஆக உள்ளது. வரும் ஜூன் 5-ம் தேதி அமேசான், லாவா இ-ஸ்டோர் போன்ற தளங்களில் இந்த போனை வாங்க முடியும். குறிப்பாக சீன செல்போன் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் மலிவு விலையில் இந்த 5ஜி போனை அறிமுகம் செய்துள்ளது லாவா.


Click it and Unblock the Notifications








