Home
Mobile

தீபாவளிக்கு மொத்த ஆர்டரும் இதுக்குதான்.. ரூ.8,000-க்கு 5G போன்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் லாவா யுவா 5ஜி (Lava Yuva 5G) போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் 2.5டி கர்வ்ட் டிஸ்பிளே கிடைப்பது மட்டுமல்லாமல், 50 எம்பி மெயின் கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 8 ஜிபி ரேம் மற்றும் 1 டிபிக்கான மெமரி சப்போர்ட் கொடுக்கிறது. ஆக்டா கோர் யுனிசோக் டி750 சிப்செட் கொண்ட இந்த லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.9,499ஆகவும், 4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட்டானது ரூ.7,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக ரூ.750 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது.

தீபாவளிக்கு மொத்த ஆர்டரும் இதுக்குதான்.. ரூ.8,000-க்கு 5G போன்!

ஆகவே, ரூ.7,249 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. அதேபோல 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டானது ரூ.8,799 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதற்கும் ரூ.750 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டை ரூ.8,049 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

லாவா யுவா 5ஜி அம்சங்கள் (Lava Yuva 5G Specification): இந்த லாவா ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த 2.5டி கர்வ்ட் டிஸ்பிளேவில் (2.5D Curved Display) எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. மேலும், 16 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது.

இந்த பட்ஜெட்டிலும் வாட்டர் டிராப் நாட்ச் கொடுக்காமல், பஞ்ச்-ஹோல் (Punch Hole) டிசைன் கொடுக்கிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அப்டேட் கொடுக்கிறது. 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது. ஆக்டா கோர் 6என்எம் யுனிசோக் டி750 (Octa Core 6nm Unisoc T750) சிப்செட் கொடுக்கிறது.

இந்த பட்ஜெட் சிப்செட்டுக்கு ஏற்ப மாலி ஜி57 எம்பி2 ஜிபியு (Mali G57 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. இந்த கேமராவில் எச்டி ரெக்கார்டிங் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த பட்ஜெட் கேமராவிலும் போர்ட்ராய்டு (Portrait), ஸ்லோவ் மோஷன் (Slow Motion), டைம்லேப்ஸ் (Timelapse), மோஷன் போட்டோ (Motion Photo) மற்றும் ரீபோகஸ் (Refocus) போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கிடைக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.

இந்த லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கிடைக்கிறது. 5ஜி (5G), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) உள்ளது. அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கும்படி மிஸ்டிக் கிரீன் (Mystic Green) மற்றும் மிஸ்டிக் ப்ளூ (Mystic Blue) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Yuva 5G With 50MP Camera Available At Rs 8049 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X