Home
Mobile

சும்மா மிரட்டுராப்ல.. வெறும் ரூ.9499 போதும்.. 50MP கேமரா.. 18W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டே அதிரும் பட்ஜெட்டில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், 50 எம்பி ஏஐ கேமரா, 1 டிபி மெமரி சப்போர்ட், 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் லாவா யுவா 5ஜி (Lava Yuva 5G) போன் விற்பனைக்கு வந்துள்ளது. விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அப்டேட், கிளாஸ் பேக் போன்ற மற்ற பீச்சர்களும் தட்டித் தூக்குகிறது. இந்த லாவா யுவா 5ஜி போனின் முழு பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.

லாவா யுவா 5ஜி அம்சங்கள் (Lava Yuva 5G Specifications): இந்த லாவாவில் 6.5 இன்ச் (1600 × 720 பிக்சல்கள்) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 2.5D கர்வ்ட் டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் வருகிறது.

சும்மா மிரட்டுராப்ல.. வெறும் ரூ.9499 போதும்.. 50MP கேமரா.. 18W சார்ஜ்!

பிரீமியம் டிசைனில் ஏஐ சப்போர்ட் உடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, இந்த லாவாவில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் வருகிறது. ஸ்கிரீன் ஃபிளாஷ் சப்போர்ட் கொண்ட 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. எச்டியில் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம்.

இந்த கேமராவில் பட்ஜெட்டிலும் போர்ட்ராய்டு (Portrait), ஸ்லோவ் மோஷன் (Slow Motion), டைம் லேப்ஸ் (Timelapse), ரீபோகஸ் (Refocus), மோஷன் போட்டோ (Motion Photo), அல்ட்ரா ரெசொலூஷன் (Ultra Resolution), எச்டிஆர் (HDR), நைட் (Night), ப்ரோ (Pro) போன்ற பீச்சர்கள் வருகின்றன. மலிவு விலை போன்களில் இதுபோன்ற பீச்சர்கள் வரவேற்கத்தக்கது.

இந்த லாவா யுவா 5ஜி போனில் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் வருகிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகிறது.

சும்மா மிரட்டுராப்ல.. வெறும் ரூ.9499 போதும்.. 50MP கேமரா.. 18W சார்ஜ்!

18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி (Type-C) போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியை 133 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். 445 மணி நேரங்களுக்கு ஸ்டான்ட்பை டைம் கொடுக்கும். அதேபோல 510 நிமிடங்களுக்கு தொடர்ந்து வீடியோ பிளே பேக் டைம் கொடுக்கும்.

இந்த பேட்டரியுடன் 9.1 மிமீ தடிமன் மற்றும் 208 கிராம் எடை வருகிறது. இந்த லாவாவில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), மைக்ரோஎஸ்டிகார்டு சிலாட் (microSD Card Slot), டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் பாட்டம்போர்டெட் ஸ்பீக்கர்கள் வருகின்றன.

5ஜி, டுயல் 4ஜி சப்போர்ட் கொண்டிருக்கிறது. மிஸ்டிக் கிரீன் (Mystic Green) மற்றும் மிஸ்டிக் ப்ளூ (Mystic Blue) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த லாவா யுவா 5ஜி போனின் விலை ரூ.9,499ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.9000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Yuva 5G With 50MP Camera, 8GB RAM Sale Under Rs 10000 in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X