வெளுத்துக்கட்ட போகுது ஆர்டர்.. வெறும் ரூ.6,999-க்கு 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 10W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த சீன மார்கெட்டும் மூக்கில் விரல் வைக்கும்படி லாவா யுவா 4 (Lava Yuva 4) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. அடிமட்ட பட்ஜெட்டில் 50 எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரி, 10W ஃபாஸ்ட் சார்ஜிங், 512 ஜிபி மெமரி போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த புதிய லாவா யுவா 4 போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மூலம் தனி வரவேற்பு பெற்றிருக்கிறது.
ரூ.10000 அல்லது ரூ.8000 பட்ஜெட்டில் கிடைக்கும் போன்களில் சீன மார்கெட்டை அடித்து கொள்ள முடியாது. கம்மி காசில் நம்ப முடியாத பீச்சர்களையும், பிரீமியம் டிசைனையும் கொடுத்து இந்திய மார்கெட்டை பிடித்து வருகின்றன. ஆனால், இந்தியாவின் லாவா நிறுவனம் இப்போது கடும் போட்டியாக மாறி இருக்கிறது. இதில் லாவா யுவா 4 கை கோர்த்துள்ளது.

லாவா யுவா 4 அம்சங்கள் (Lava Yuva 4 Specifications) எப்படி? இந்த லாவா போனின் டிசைனே பிரீமியமாக இருக்கிறது. குளோசி டிசைனில் மார்பிள்-லைக் பேக் பேனல் கிடைக்கிறது. குளோசி ஒயிட் (Glossy White) மற்றும் குளோசி பிளாக் (Glossy Black) ஆகிய கலர்களில் வருகிறது. மேலும், குளோசி பர்ப்பிள் (Glossy Purple) கலரும் உள்ளது. டிரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) கொண்டுள்ளது.
ஆனால், 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி சென்சார்கள் கிடைக்கின்றன. இந்த லாவா யுவா 4 போனில் செல்பீ கேமரா 8 எம்பியில் இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அப்டேட்டை கொடுக்க இருக்கிறது. ரூ.10000 பட்ஜெட்டில் கிடைக்கும் சிப்செட் இந்த போனிலும் பார்க்க முடிகிறது.
ஆகவே, 12 எம்எம் ஆக்டா கோர் யுனிசோக் டி606 (12nm Octa-Core Unisoc T606) மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ப கேமிங் பர்ஃமென்ஸ் கொடுக்கும் மலி ஜி57 எம்சி2 (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த லாவா யுவா 4 போனில் 2 மெமரி வேரியண்ட்கள் கஸ்டமர்களுக்கு கிடைக்க இருக்கிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மைக்ரோஎஸ்டி கொண்டிருக்கிறது.
இந்த 4 ஜிபி ரேம் மாடலுக்கு 64 ஜிபி மெமரி மற்றும் 128 ஜிபி மெமரி 2 மாடல்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. மீடியமான அவுட்புட் கொடுக்கும் 6.5 இன்ச் (1600 × 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவும், அதற்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷனும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட்டும் கிடைக்கிறது. இருப்பினும், வாட்டர் டிராப் இல்லாமல், பஞ்ச்-ஹோல் வருகிறது.
இந்த லாவா யுவா 4 போனில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி (Type-C) போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. கனெக்டிவிட்டியை பார்க்கையில், இதுவொரு 4ஜி வேரியண்ட்டாக இருப்பதால், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS) மற்றும் வை-பை 802 ( Wi-Fi 802) கிடைக்கிறது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரும் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் இயர்போன் ஜாக்கும் (Earphone Jack) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த லாவா யுவா 4 போனின் விலையானது, ஆரம்ப சலுகையுடன் ரூ.6,999ஆக தொடங்கு இருக்கிறது. ஆகவே, 64 ஜிபி மெமரி மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் விற்பனைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications