சீன நிறுவனங்கள் ஆடிப்போயிடுச்சே.. 50எம்பி கேமரா.. மலிவு விலை 5ஜி போனை இறக்கும் இந்திய நிறுவனம்..
லாவா நிறுவனம் அடுத்து லாவா யுவா 4 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் லாவா யுவா 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது.
குறிப்பாக வட்ட வடிவ கேமரா அமைப்பு கொண்டுள்ளது இந்த லாவா யுவா 4 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த போன் பன்ச் ஹோல் டிஸ்பிளே(Punch Hole Display) வடிவமைப்பைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான லாவா யுவா 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

லாவா யுவா 4 ப்ரோ அம்சங்கள் (Lava Yuva 4 Pro specifications): இந்த லாவா யுவா 4 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரெட்மி 12 5ஜி, மோட்டோ ஜி34 5ஜி ஆகிய போன்களுக்கு மிகப் பெரிய போட்டியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக லாவா யுவா 4 ப்ரோ போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.
அதேபோல் சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6080 5ஜி சிப்செட் (MediaTek Dimensity 6080 chipset) உடன் இந்த அசத்தலான லாவா யுவா 4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக டைமன்சிட்டி 6080 5ஜி சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த லாவா யுவா 4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போனின் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தி உள்ளது லாவா நிறுவனம்.
குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த லாவா யுவா 4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன.
50எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது லாவா யுவா 4 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளதாக கூறப்படுகிறது.
6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த லாவா யுவா 4 ப்ரோ போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 650 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த லாவா யுவா 4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உள்ளதாக கூறப்படுகிறது. பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த லாவா யுவா 4 ப்ரோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் லாவா யுவா 4 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.
photo courtesy: 91mobiles, gadgets360


Click it and Unblock the Notifications








