அம்புட்டு பேரும் விழுந்தடிச்சு வாங்க போறாங்க.. ரூ.6000 பட்ஜெட்ல UFS 2.2 ஸ்டோரேஜ், iPhone டிசைன், Triple கேமரா!
கடந்த சில மாதங்களாவே, இந்திய நிறுவனமான லாவா (Lava) சில அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக அதன் அக்னி சீரிஸ் மற்றும் யுவா சீரிஸின் கீழ் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வண்ணம் உள்ளன.
இந்நிலைப்பாட்டில் "கனவில் கூட நினைத்து பார்க்காத விலைக்கு" லாவாவின் யுவா சீரீஸின் (Lava Yuva Series) கீழ் ஒரு புதிய மாடல், இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதென்ன மாடல்? அது எப்போது அறிமுகமாகும்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது லாவா யுவா 3 ஸ்மார்ட்போனை பற்றித்தான். கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலையை லாவா நிறுவனம் இப்போதே அறிவித்து விட்டது. கூடவே லாவா யுவா 3 ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் முக்கிய அம்சங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.
லாவா யுவா 2 (Lava Yuva 2) ஸ்மார்ட்போனிற்கு பிறகு இந்தியாவில் அறிமுகமாகும் லாவா யுவா 2 ஸ்மார்ட்போன் ஆனது கடந்த டிசம்பர் 2023 இல் அறிமுகம் செய்யப்பட்ட லாவா யுவா 3 ப்ரோ (Lava Yuva 3 Pro) மாடலுடன் இணையும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

லாவா யுவா 3 ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் அம்சங்கள்: எக்ஸ் தளம் வழியாக லாவா மொபைல்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ள அதிகாரப்பூர்வ டீசரில், லாவா யுவா 3 ஸ்மார்ட்போனை பர்பிள் கலர் ஆப்ஷனில் காண முடிகிறது. மேலும் லாவா யுவா 3 ஸ்மார்ட்போனின் பேக் பேனல் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பையும் காண முடிகிறது.
ஆப்பிள் ஐபோன்களில் காணப்படுவது போலவே லாவா யுவா 3 ஸ்மார்ட்போனின் மூன்று கேமரா சென்சார்கள் ஆனது தனித்தனியாக மற்றும் சற்றே உயர்த்தப்பட்ட சர்குலர் யூனிட்களாக (Circular Units) உள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் சிறிய வட்டமான எல்இடி ஃபிளாஷ் (LED Flash) யூனிட்டும் அடக்கம்.

லாவா யுவா 3 ஸ்மார்ட்போனின் அடிப்பகுதி ஸ்பீக்கர் கிரில் (Speaker Grill), யூஎஸ்பி டைப்-சி போர்ட், ஹெட்ஃபோன் ஜாக் (Headphone Jack) மற்றும் மைக் ஆகியவற்றை காண முடிகிறது. மேலும் ஸ்மார்ட்போனின் வலது விளிம்பில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டனை பார்க்க முடிகிறது.
லாவா யுவா 3 ஸ்மார்ட்போனின் விலை: எக்ஸ் (ட்விட்டர்) தளம் வழியாக லாவா மொபைல்ஸ் (Lava Mobiles) பகிர்ந்த தகவலின்படி, லாவா யுவா 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.6799 க்கு அறிமுகம் செய்யப்படும். அதே போஸ்ட்டில் இந்த ஸ்மார்ட்போன் யுஎஃப்எஸ் 2.2 ஆன்போர்ட் ஸ்டோரேஜை (UFS 2.2 Onboard Storage) ஆதரிக்கும் என்பதும், இது 64ஜிபி மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
சற்றே பழைய லாவா யுவா 2 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 3ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.6,999க்கு அறிமுகமானது. லாவா யுவா 3 ப்ரோவை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் சிங்கிள் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், இந்தியாவில் ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது டெசர்ட் கோல்ட், ஃபாரஸ்ட் விரிடியன் மற்றும் மெடோ பர்பில் கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.
லாவா யுவா 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப், 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா, 6.5-இன்ச் எச்டி+ (720 x 1,600 பிக்சல்ஸ்) டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான யுஐ, ஆக்டா கோர் யூனிசோக் டி616 சிப்செட் மற்றும் 18W வயர்டு சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.


Click it and Unblock the Notifications








