யாரு சாமி அவன்.. வெறும் ரூ.6,799 போதும்.. HD+ டிஸ்பிளே.. AI கேமரா.. 512GB மெமரி.. எந்த போன்?
ஒட்டுமொத்த சீன நிறுவனங்களும் மிரளும்படியான பட்ஜெட்டில் எச்டிபிளஸ் டிஸ்பிளே, 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, டிரிபிள் ரியர் கேமரா, 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் இந்தியாவின் லாவா யுவா 3 (Lava Yuva 3) போன் விற்பனைக்கு வந்துள்ளது.
ஐடெல், ரியல்மி, ரெட்மி போன்ற நிறுவனங்கள் மட்டுமே ரூ.10,000 பட்ஜெட்டலான மாடல்களில் அதிகளவிலான விற்பனையை பதிவு செய்து வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு நிகராக இந்தியாவின் லாவா நிறுவனம், இப்போது, லாவா யுவா 3 போனை களமிறக்கி இருக்கிறது. இந்த போனின் விற்பனை அமேசான் (Amazon) தளத்தில் தொடங்கி இருக்கிறது.

லாவா யுவா 3 அம்சங்கள் (Lava Yuva 3 Specifications): இந்த லாவா போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி606 (Octa Core Unisoc T606) சிப்செட் வருகிறது. அதோடு மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் 6.5 இன்ச் (1600 × 720 பிக்சல்கள்) பன்ஞ் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) வருகிறது. இதுவொரு எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவானது, 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 269 PPI பிக்சல் டென்சிட்டி மற்றும் 16.7 மில்லியன் கலர் சப்போர்ட் கொண்டுள்ளது.
பட்ஜெட்டிலும் டிரிபிள் ரியர் கேமரா (Triple Rear Camera) சிஸ்டம் கொண்டிருக்கிறது. ஆகவே, 13 எம்பி மெயின் கேமரா + ஏஐ (AI) லென்ஸ் + விஜிஏ (VGA) வருகிறது. இந்த கேமராவில் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.

இந்த கேமராவில் எச்டிஆர் (HDR), போர்ட்ராய்டு (Portrait), ஏஐ (AI), நைட் (Night), ப்ரோ (Pro), ஸ்லோவ் மோஷன் (Slow Motion), டைம் லேப்ஸ் (Timelapse) போன்ற பீச்சர்கள் வருகின்றன. 5 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. இந்த லாவா போனில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட் வருகிறது.
அதேபோல 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு வருகிறது. 4 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 512 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. ஆகவே, பட்ஜெட்டிலும் பக்காவான பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம்.
இந்த லாவா யுவா 3 போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி கேபிள் (Type-C Cable) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியோடு 164 கிராம் எடை மற்றும் 8.45 மிமீ தடிமன் கொண்டுள்ளது. சைடு ஃபிங்கர்பிரின்ட் சென்சார் (Side Fingerprint Sensor) வருகிறது.

அதேபோல பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் உள்ளது. மேலும், கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) சப்போர்ட் கொண்டுள்ளது. ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light) சென்சார் வருகிறது. இந்த போனில் 3.5மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) கொடுக்கப்பட்டுள்ளது.
எலிப்ஸ் பிளாக் (Eclipse Black), காஸ்மிக் லாவெண்டர் (Cosmic Lavender) மற்றும் கேலக்ஸி ஒயிட் (Galaxy White) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் 4 ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.6,799ஆகவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.7,299ஆகவும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








