பொளந்து கட்டுது விற்பனை.. வெறும் ரூ.6000 பட்ஜெட்ல 8GB ரேம்.. 18W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) பட்ஜெட் பிரியர்கள் அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான டிஸ்கவுண்ட்டில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம், 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, எச்டிபிளஸ் டிஸ்பிளே போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் வெளியான லாவா யுவா 3 (Lava Yuva 3) போன் கிடைக்கிறது. இந்த லாவாவின் முழு பீச்சர்கள் எப்படி? விலை மற்றும் டிஸ்கவுண்ட் எவ்வளவு? இதுகுறித்த முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
லாவா யுவா 3 அம்சங்கள் (Lava Yuva 3 Specifications): இந்த லாவாவில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி606 12என்எம் (Octa Core Unisoc T606 12nm) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் போன்களுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

பஞ்ச்-ஹோல் டிசைன் (Punch Hole Design) கொண்ட 6.5 இன்ச் (1600 × 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் டிஸ்பிளே மாடலாகும். மேலும், 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. இதுபோக 16.7 மில்லியன் கலர் டெப்த் உள்ளது.
இந்த லாவா போனில் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வருகின்றன. இந்த 2 வேரியண்ட்களிலும் 512 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் வருகிறது. கேமரா பட்டையை கிளப்பும்படி இருக்கிறது.
இந்த அடிமட்ட பட்ஜெட்டிலும் 13 எம்பி மெயின் கேமரா + AI லென்ஸ் + விஜிஏ (VGA) கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த கேமராவில் 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. மேலும், நைட் மோட் (Night Mode), ஏஐ மோட் (AI Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) வருகிறது.
இதுபோக பியூட்டி மோட் (Beauty Mode), எச்டிஆர் மோட் (HDR Mode), ப்ரோ மோட் (Pro Mode) மற்றும் பனோரமா (Panorama), ஸ்லோவ் மேஷன் (Slow Motion) மற்றும் டைம்லேப்ஸ் (Timelapse) பீச்சர்களும் கிடைக்கின்றன. இந்த லாவா யுவா 3 போனில் 5 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. பேட்டரி சிஸ்டமும் பட்ஜெட்டைவிட கூடுதலாக இருக்கிறது.
18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் டைப்-சி போர்ட் (Type-C Port) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. காஸ்மிக் லாவண்டர் (Cosmic Lavender), எலிப்ஸ் பிளாக் (Eclipse Black) மற்றும் கேலக்ஸி ஒயிட் (Galaxy White) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த லாவா யுவா போன் ஒரு 4ஜி மாடலாகும்.
லாவா யுவா 3 பிளிப்கார்ட் விற்பனை (Lava Yuva 3 Flipkart Sale): இந்த லாவாவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.7,635ஆக இருக்கிறது. இப்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,514 உடனடி டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.6,121 பட்ஜெட்டில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








