சைலண்ட் மோடில் சீன நிறுவனங்கள்.. 50MP கேமரா.. LCD டிஸ்பிளே.. 2 போன்களை இறக்கும் இந்திய நிறுவனம்.. எந்த மாடல்?
லாவா நிறுவனம் அடுத்து லாவா யுவா 3 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய போன் தற்போது அமேசான் (Amazon) மைக்ரோ-சைட்-இல் காணப்பட்டுள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த லாவா யுவா 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
லாவா யுவா 2 ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஆண்டு கம்மி விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் லாவா யுவா 3 ஸ்மார்ட்போன் கூட கம்மி விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த லாவா யுவா 3 போனின் சில அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

லாவா யுவா 3 அம்சங்கள் (Lava Yuva 3 specifications): 64ஜிபி மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த லாவா யுவா 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் 512ஜிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
அதேபோல் எல்சிடி டிஸ்பிளே, 50எம்பி ரியர் கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யுனிசாக் சிப்செட் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த லாவா யுவா 3 போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் லாவா யுவா 4 ப்ரோ எனும் 5ஜி ஸ்மார்ட்போனை கூட விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது லாவா நிறுவனம். சமீபத்தில் இந்த லாவா யுவா 4 ப்ரோ போனின் அம்சங்கள் வெளியானது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

லாவா யுவா 4 ப்ரோ அம்சங்கள் (lava yuva 4 pro specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6080 5ஜி சிப்செட் (MediaTek Dimensity 6080 chipset) உடன் இந்த அசத்தலான லாவா யுவா 4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். டைமன்சிட்டி 6080 5ஜி சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
இந்த லாவா யுவா 4 ப்ரோ ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் அறிமுகமாகும். கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன
50எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது லாவா யுவா 4 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும்,
வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த லாவா யுவா 4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
குறிப்பாக 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த லாவா யுவா 4 ப்ரோ போன் வெளிவரும் என கூறப்படுகிறது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 650 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த லாவா யுவா 4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உள்ளதாக கூறப்படுகிறது. பின்பு 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் ரூ.10,000 பட்ஜெட்டில் இந்த லாவா யுவா 4 ப்ரோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
ரெட்மி, மோட்டோ போன்ற சீன நிறுவனங்களுக்கு போட்டியாக இந்திய நிறுவனமான லாவா விரைவில் லாவா யுவா 4 ப்ரோ மற்றும் லாவா யுவா 3 போன்களை கம்மி விலையில் அறிமுகம் செய்யும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








