மிரளுது ஆர்டர்.. ரூ.8,999 பட்ஜெட்ல 16GB ரேம்.. 512GB மெமரி.. 50MP கேமரா.. எந்த போன்?
இன்பினிக்ஸ், ஐடெல், ரியல்மி மற்றும் போகோ போன்ற நிறுவனங்களின் பட்ஜெட் போன்களையே தூக்கி சாப்பிடும் விதமாக 16ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 5000mAh பேட்டரி, ஏஐ கேமரா போன்ற அம்சங்களுடன் லாவா யுவா 3 ப்ரோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
லாவா யுவா 3 ப்ரோ அம்சங்கள் (Lava Yuva 3 Pro Specifications): இந்த லாவா போனில் 6.5 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) வருகிறது. இதுவொரு எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 260 பிபிஐ மற்றும் 16 மில்லியன் கலர் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி616 (Octa-core UNISOC T616) சிப்செட் வருகிறது. இந்த லாவா யுவா 3 போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதோடு 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dyanamic RAM) வருகிறது.
அதுமட்டுமல்லாமல், 512 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, பட்ஜெட் விலையிலும் பக்காவான பர்பாமென்ஸ் எதிர்பார்க்கலாம். இந்த லாவா போனில் எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய டூயல் கேமரா சிஸ்டம் (Dual Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.
அதோடு ஏஐ (AI) லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் 1080p ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் இருக்கிறது. அதேபோல பியூட்டி (Beauty), எச்டிஆர் (HDR), போர்ட்ராய்டு (Portrait), நைட் (Night) ஸ்லோவ் மோஷன் (Slow Motion) மற்றும் (Pro) ப்ரோ போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன.

இந்த போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்ய 121 நிமிடங்கள் தேவைப்படுகிறது. இந்த சார்ஜ் மூலம் 476 நிமிடங்கள் வீடியோ பிளேபேக், 500 மணி நேரம் ஸ்டான்பை பேக்கப் கிடைக்கிறது.
அதோடு பேட்டரி சேவர் மோட் (Battery Saver Mode) வருகிறது. இந்த லாவா போனில் சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor), பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் சிங்கிள் போர்டெட் ஸ்பீக்கர் வருகிறது.
இந்த லாவா போனின் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், டூயல் 4ஜி (Dual 4G) ப்ளூடூத் வி5.0 (Bluetooth V5.0), ஓடிஜி (OTG) மற்றும் வை-பை 802 (Wi-Fi 802) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போன் பட்ஜெட் விலையிலும் பிரீமியம் டிசைன் மற்றும் கலர் கொண்டிருக்கிறது.
ஆகவே, டெசர்ட் கோல்டு (Desert Gold), ஃபாரஸ்ட் விரிடியன் (Forest Viridian) மற்றும் மிடவ் பர்பிள் (Meadow Purple) ஆகிய 3 கலர்கள் கிடைக்கின்றன. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லாவா இ-ஸ்டோர் (Lava E-store) மற்றும் ரீடெய்ல் அவுட்லெட்களில் (Retail Outlets) ஆர்டருக்கு கிடைக்கிறது.

இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தும் வெறும் ரூ.8,999 பட்ஜெட்டில் விலை நிர்ணயம் இருக்கிறது. ரூ.10,000 பட்ஜெட்டில் பிரீமியம் லுக், நல்ல ரேம், ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பேட்டரி, மீடியம் குவாலிட்டி கேமரா கொண்ட போன் வேண்டும் என்றால், இந்த லாவா யுவா 3 ப்ரோ மாடலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








