சீன மொபைல்களுக்கு ரிவிட் அடிக்கும் இந்திய கம்பெனி.. 50MP கேமரா, 5000mAh பேட்டரி.. பட்ஜெட் போன்.. எந்த மாடல்?
இந்திய மொபைல் பிராண்டின் (Indian Mobile Brand) புதிய ஸ்மார்ட்போன் ஒன்று அறிமுகத்திற்குத் தயாராக உள்ளது. அதாவது இந்திய நிறுவனமான லாவா வரும் டிசம்பர் 14-ம் தேதி லாவா யுவா 3 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்நிலையில் லாவா யுவா 3 ப்ரோ (Lava Yuva 3 Pro) போனின் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த லாவா போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த லாவா யுவா 3 ப்ரோ போனின் விவரக்குறிப்புகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

லாவா யுவா 3 ப்ரோ அம்சங்கள் (Lava Yuva 3 Pro specifications): பஞ்ச் ஹோல் கட்அவுட் டிசைன் கொண்ட 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவைக் கொண்டு லாவா யுவா 3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக லாவா யுவா 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த யுனிசாக் டி616 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
ஆனாலும் இந்த லாவா போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த லாவா யுவா 3 ப்ரோ போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான லாவா யுவா 3 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த லாவா போன் வெளிவரும்.
இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த லாவா போனில் உள்ளன. பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான லாவா யுவா 3 ப்ரோ ஸ்மார்ட்போன்.
அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த லாவா யுவா 3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இந்த லாவா போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவாக சார்ஜ் செய்து விடமுடியும்.

குறிப்பாக 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த லாவா போனில் உள்ளன.
மேலும் லாவா யுவா 3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக சீன நிறுவனங்களின் மொபைல் போன்களுக்கு போட்டியாக இந்த லாவா யுவா 3 ப்ரோ மாடல் கம்மி விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








