Home
Mobile

ஆர்டர் பிச்சிக்கும்.. வெறும் ரூ.7000 பட்ஜெட்ல AI கேமரா.. 8GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டே அதிரும்படி வெறும் ரூ.7000 பட்ஜெட்டில் எச்டி டிஸ்பிளே, 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, ஏஐ கேமரா, 18W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களுடன் லாவா யுவா 3 (Lava Yuva 3) போன் களமிறங்கியிருக்கிறது.

லாவா யுவா 3 அம்சங்கள் (Lava Yuva 3 Specifications): இந்த லாவா போனில் 6.5 இன்ச் (1600 × 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட பன்ஞ் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 269 பிபிஐ (PPI), 16.7 மில்லியன் கலர் சப்போர்ட் வருகிறது.

 ரூ.7000 பட்ஜெட்ல AI கேமரா.. 8GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) கொண்டிருக்கிறது. ஆக்டா கோர் யுனிசோக் டி606 (Octa Core Unisoc T606) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த லாவா யுவா 3 போனில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.

அதோடு 4 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) மற்றும் 512 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது. 13 எம்பி டிரிபிள் ஏஐ ரியர் கேமரா (Triple AI Rear Camera) செட்டப் கொண்டிருக்கிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது. அதோடு 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த கேமராவில் பியூட்டி (Beauty), எச்டிஆர் (HDR), நைட் (Night), போர்ட்ராய்டு (Portrait), ஏஐ (AI), ப்ரோ (Pro), பனோரமா (Panorama), ஸ்லோவ் மோஷன் (Slow Motion), ஃபில்டர்ஸ் (Filters), டைம் லேப்ஸ் (Timelapse), இன்டலிஜன்ட் ஸ்கேனிங் (Intelligent Scanning) மற்றும் பர்ஸ்ட் (Burst) ஆகிய பீச்சர்கள் வருகின்றன.

 ரூ.7000 பட்ஜெட்ல AI கேமரா.. 8GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

மலிவான பட்ஜெட்டில், இதுபோன்ற பீச்சர்களுடன் சில போன்கள் மட்டுமே கிடைக்கின்றன. இந்த லாவா யுவா 3 போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் வருகிறது. அதோடு டைப்-டி யுஎஸ்பி கேபிள் (Type-C USB Cable) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 164 கிராம் எடை கொண்டுள்ளது.

8.45 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) சப்போர்ட் உள்ளது. சைடு ஃபிங்கர்பிரின்ட் சென்சார் (Side Fingerprint Sensor), பேஸ் அன்லாக் (Face Unlock), பேட்டரி சேவர் மோட் (Battery Saver Mode) போன்ற பீச்சர்கள் கொண்டுள்ளது. ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light), பிராக்சிமிடி (Proximity) மற்றும் ஆக்சிலரோமீட்டர் (Accelerometer) வருகிறது.

 ரூ.7000 பட்ஜெட்ல AI கேமரா.. 8GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்த லாவாவில் 3.5மிமீ ஆடியோ ஜாக், டூயல் நானோ மற்றும் எஸ்டி கார்டு சிலாட் இடம்பெற்றுள்ளது. 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. ப்ரீமியம் குளோசி பேக் பினிஷிங் (Premium Glossy Back Finish) கொண்டிருக்கிறது.

அதோடு எலிப்ஸ் பிளாக் (Eclipse Black), காஸ்மிக் லாவெண்டர் (Cosmic Lavender) மற்றும் கேலக்ஸி ஒயிட் (Galaxy White) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனின் 4ஜிபி+64ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.6,799ஆகவும், 4ஜிபி+128ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.7,299ஆகவும் இருக்கிறது. பிப்ரவரி 7ஆம் தேதி முதல் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Yuva 3 Launched Under Rs 8000 Sale From February 7 on Amazon India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X