தூள் பறக்கும் விற்பனை.. ரூ.6999 க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்.. கிளாஸ் டிசைன்.. 6GB ரேம்.. 5000mAh பேட்டரி!
"ரூ.6,999 க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்.. பேசாம ஒரு ஆர்டர் போட்டுடலாம்!" என்று யோசிக்க வைக்கும்படியாக இந்திய சந்தையில் ஒரு தரமான சூப்பர்-பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு, அதன் விற்பனையும் தொடங்கிவிட்டது. அதென்ன மாடல்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
இந்தியாவை அடிப்படையாக கொண்ட மொபைல் போன் பிராண்ட் ஆன லாவா நிறுவனம், அதன் யுவா சீரீஸின் கீழ் லாவா யுவா 2 (Lava Yuva 2) என்கிற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. வெறும் ரூ.6,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் விலையை மீறிய பல அம்சங்கள் உள்ளன.

டிஸ்பிளே மற்றும் ப்ராசஸர்: இது 90ஹெட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டிற்கான (90Hz Refresh Rate) ஆதரவு மற்றும் 1600 × 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் உடனான 6.5-இன்ச் எச்டி பிளஸ் (HD+) டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் யுனிசாக் டி606 சிப்செட் (Unisoc T606 SoC) மூலம் இயக்கப்படுகிறது.
ரேம் மற்றும் விர்ச்சுவல் ரேம்: மேலும் லாவா யுவா 2 ஸ்மார்ட்போன் ஆனது 3ஜிபி ரேம் உடன் வருகிறது. கூடுதலாக இது 3ஜிபி விர்ச்சுவல் ரேமிற்கான (3GB Virtual RAM) ஆதராவையும் கொண்டுள்ளது. அறியாதோர்களுக்கு விர்ச்சுவல் ரேம் என்றால், மொபைல் போனின் பயன்படுத்தப்படாத இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து 3ஜிபி-ஐ ரேம் ஆக "கடன் வாங்கிக்கொள்ள" உதவும் ஒரு அம்சமாகும்.
இன்டர்னல் ஸ்டோரேஜ்: லாவா யுவா 2 ஸ்மார்ட்போன் ஆனது 64ஜிபி யுஎஃப்எஸ் 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ் (64GB UFS 2.2 internal Storage) உடன் வருகிறது. கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி ஸ்லாட்டும் (MicroSD Slot) உள்ளது. இதன் மூலம் போனின் ஸ்டோரேஜை 512ஜிபி வரை நீடிக்க முடியும்.
ஓஎஸ் மற்றும் ஓஎஸ் அப்டேட்ஸ்: லாவா யுவா 2 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. லாவாவின் கூற்றுப்படி இந்த ஸ்மார்ட்போனில் எந்த ப்ளோட்வேரும் (Bloadtware) இருக்காது. மேலும் இந்த போனிற்கு 2 ஆண்டுகளுக்கான அப்டேட்ஸ் வாக்குறுதிகளும் கிடைத்துள்ளது.
அதாவது லாவா யுவா 2 ஸ்மார்ட்போனிற்கு அடுத்த 2 ஆண்டுகளில் 1 முக்கிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் (1 Major Android upgrade) மற்றும் காலாண்டு இடைவெளியில் செக்யூரிட்டி அப்டேட்களும் (Quarterly Security Updates) கிடைக்கும் என்று லாவா நிறுவனம் உறுதியளித்துள்ளது.
ரியர் கேமரா மற்றும் செல்பீ கேமரா: இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 13 மெகாபிக்சல் மெயின் கேமரா மற்றும் ஒரு விஜிஏ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்திசெய்வதற்காக 5எம்பி செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரி மற்றும் சார்ஜிங் சப்போர்ட்: பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) உடன் வரும் லாவா யுவா 2 ஸ்மார்ட்போன் ஆனது 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இது 10W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் (10W Charging Support) வருகிறது
மற்ற அம்சங்களை பொறுத்தவரை, லாவா யுவா 2 ஸ்மார்ட்போன் ஆனது டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி) ஆதரவுடன் (Dual SIM Support) வருகிறது. மேலும் இது 3.5மிமீ ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, 4ஜி வோல்ட்இ ஆதரவு, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், யூஎஸ்பி டைப்-சி போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. கடைசியாக இது எடையில் 202 கிராம் உள்ளது.
கலர் ஆப்ஷன்ஸ், விலை மற்றும் விற்பனை: கிளாஸ் பேக் டிஸைனுடன் வரும் லாவா யுவா 2 ஸ்மார்ட்போன் ஆனது கிளாஸ் ப்ளூ, கிளாஸ் லாவெண்டர் மற்றும் கிளாஸ் கிரீன் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னரே குறிப்பிடப்படி ரூ.6,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. இது ஏற்கனவே லாவாவின் ரீடெய்ல் நெட்வொர்க் வழியாக வானபா கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








