அட்டை காப்பி.. ஆனாலும் சூப்பரா இருக்கு! வெறும் ரூ.8000க்கு ஐபோன் டிசைனில் விற்பனையாகும் Lava போன்!
"ஈயடிச்சான் காப்பி" என்கிற வார்த்தைக்கு கூடுதல் அர்த்தத்தை சேர்க்கும்படி, இந்திய மொபைல் பிராண்ட் ஆன லாவா (Lava), அச்சு அசலாக ஐபோன் (iPhone) போலவே இருக்கும் ஒரு புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்து, அதை ஆபர் விலையின் கீழ் விற்பனையும் செய்து வருகிறது.
நாம் இங்கே பேசுவது லாவா யுவா 2 ப்ரோவை (Lava Yuva 2 Pro) பற்றித்தான். டக்கென்று பார்க்கும் போது லேட்டஸ்ட் ஐபோனை போலவே இருக்கும் இந்த லாவா போனின் அசல் விலை என்ன? ஆஃபர் விலை என்ன? அம்சங்கள் என்ன? எந்த வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

லாவா யுவா 2 ப்ரோ விலை: லாவாவின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் 4ஜிபி + 64ஜிபி என்கிற சிங்கிள் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அசல் விலை ரூ.8,999. ஆனால் அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக ரூ.1000 என்கிற தள்ளுபடியை பெற்று ரூ.7999 க்கு வாங்க கிடைக்கிறது.
லாவா யுவா 2 ப்ரோ விற்பனை: க்ளாஸ் க்ரீன், க்ளாஸ் லாவண்டர் மற்றும் க்ளாஸ் ஒயிட் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ள லாவா யுவா 2 ப்ரோவின் இந்திய விற்பனை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா வழியாக பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
லாவா யுவா 2 ப்ரோ அம்சங்கள்: இது எச்டி பிளஸ், 720×1600 பிக்சல் ரெசல்யூஷன், 269பிபிஐ பிக்சல் டென்சிட்டி உடனான 6.5-இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 ப்ராசஸர் உடன் ஐஎம்ஜி பவர் விஆர் GE8320 ஜிபியு மூலம் இயக்கப்படுகிறது.
முன்னரே குறிப்பிட்டபடி, இது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது. இதிலுள்ள விர்ச்சுவல் ரேம் அம்சத்தின் வழியாக இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து ரேம்-ஐ "கடன்" வாங்கிக்கொள்ள முடியும். ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை பொறுத்தவை இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் உடன் வருகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, லாவா யுவா 2 ப்ரோவில் 13 எம்பி ப்ரைமரி கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள்-ரியர் கேமரா செட்டப் உள்ளது. இது ஒரு விஜிஏ டெப்த் சென்சார், ஒரு விஜிஏ கேமரா மற்றும் எல்இடி ஃப்ளாஷ் உடன் பேக் செய்யப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 5எம்பி செல்பீ கேமரா உள்ளது.
5000எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் யூஎஸ்பி டைப்-சி வழியிலான 10W சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவைகளுடன் வரும் இந்த பட்ஜெட் விலை லாவா போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் உள்ளது; கூடவே சாஃப்ட்வேர் அடிப்படையிலான ஃபேஸ் அன்லாக் அம்சமும் உள்ளது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, 204 கிராம் எடையுள்ள லாவா யுவா ப்ரோ 2 ஸ்மார்ட்போனில் டூயல்-சிம், 4ஜி, வைஃபை 802.11 பி/ஜி/என்/ஏசி, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் (GPS) மற்றும் க்ளோனாஸ் (GLONASS) போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களும் (Connectivity options) உள்ளன.


Click it and Unblock the Notifications








