ஆர்டர் பிச்சிக்கும்.. வெறும் ரூ.9499 போதும்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 18W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
சீன நிறுவனங்கள் கொடுக்கும் பட்ஜெட்டில் வேறு யாரும் கொடுக்க முடியாதுனு, சொல்லும் ஸ்மார்ட்போன் பிரியர்களே மூக்கில் விரல் வைக்கும்படி இந்தியாவின் லாவா நிறுவனத்தின் லாவா யுவா 2 5ஜி (Lava Yuva 2 5G) போன் அடிமட்ட பட்ஜெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் 50 எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 8 ஜிபி ரேம், 1 டிபி மெமரி பீச்சர்கள் மட்டுமல்லாமல், மார்பிள் பினிஷிங் பாடியில் பிரீமியம் லுக் கிடைக்கிறது.
இதுபோக ரியர் கேமரா பம்ப்-பில் எல்இடி லைட்னிங் நோட்டிபிகேஷன் (LED Notification Lighting) கிடைக்கிறது. டைனாமிக் ரேம், பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே, ஏஐ கேமரா போன்ற கிடைக்காத பீச்சர்களையும் பேக் செய்துள்ளது. இந்த லாவா யுவா 2 5ஜி போனின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

லாவா யுவா 2 5ஜி அம்சங்கள் (Lava Yuva 2 5G Specifications): இந்த லாவா போனில் எச்டி வீடியோ ரெக்கார்டிங்குடன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா கிடைக்கிறது. இதுவொரு ஏஐ கேமரா மாடலாகும். 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. பட்ஜெட் லாவாவில் கிடைக்கும், ஏஐ மோட் (AI Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) கிடைக்கிறது.
மேலும், ப்ரோ மோட் (Pro Mode), நைட் மோட் (Night Mode), ப்ரஸ்ட் மோட் (Burst Mode), பியூட்டி மோட் (Beauty Mode) மற்றும் எச்டிஆர் மோட் (HDR Mode) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த லாவா போனில் 6.67 இன்ச் (720 x1612 பிக்சல்கள்) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே வருகிறது. இந்த பஞ்ச்-ஹோல் டிஸ்பிளேவில் (Punch Hole Display) எச்டி+ (HD+) ரெசொலூஷன் உள்ளது.
மேலும், 2.5D கர்வ்ட் டிசைன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 264 பிபிஐ டென்சிட்டி மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் சீன நிறுவனங்களுக்கு நிகராக ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேக் செய்யப்பட்டுள்ளது. 6என்எம் யுனிசோக் டி760 5ஜி ஆக்டா கோர் (6nm UNISOC T760 5G Octa Core) சிப்செட் ஜி57 கிராபிக்ஸ் யுனிட் கிடைக்கிறது.

இந்த லாவா யுவா 2 5ஜி போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, 8 ஜிபி ரேம் (4 ஜிபி + 4 ஜிபி) மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த மாடலில் 1 டிபி மெமரிக்கான ஸ்டோரேஸ் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சிலாட் கிடைக்கிறது.
இந்த பட்ஜெட் போன்களில் கிடைக்கும் பேட்டரி சிஸ்டம், இந்த லாவா போனிலும் இருக்கிறது. ஆகவே, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி போர்ட் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியை 135 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். இதன் பிறகு 510 மணி நேரங்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும்.
இந்த லாவா யுவா 2 5ஜி போனில் மார்பிள் பிளாக் (Marble Black) மற்றும் மார்பிள் ஒயிட் (Marble White) கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9499ஆக இருக்கிறது. இப்போது, ரீடெயில் அவுட்லெட் ஸ்டோர்களில் மட்டும் கிடைக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் விரைவில் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








