இந்த 5G Phone-ஐ மொத்த ஊரும் ஆர்டர் போடுது.. 16GB ரேம், 66W சார்ஜிங், CLEAN ஆண்ராய்டு.. என்ன மாடல்? என்ன விலை?
13 5ஜி பேண்டுகளுக்கான ஆதரவு, 16ஜிபி வரையிலான ரேம், 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, க்ளீன் ஆன ஆண்ராய்டு ஓஎஸ் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை பேக் செய்யும் ஒரு ஸ்மார்ட்போன் மீது இப்படி ஒரு ஆ அஃபர் கிடைத்தால்.. யார்தான் ஆர்டர் போடாமல் இருப்பார்கள்!
இந்திய மொபைல் பிராண்ட் ஆன லாவா (LAVA), பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக, தனது இயர் எண்ட் சேல்-ஐ (Year End Sale) அறிவித்துள்ளது. டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு விற்பனை 2024 ஜனவரி 2 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

இந்த காலகட்டத்தில் லாவா நிறுவனத்தின் 2 லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலொரு ஸ்மார்ட்போன் தான் - லாவா அக்னி 2 5ஜி (Lava Agni 2 5G). இதுதான் நாம் மேற்கண்ட அனைத்து முக்கிய அம்சங்களையும் தன்வசம் கொண்டுள்ளது.
லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் வழியாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும். நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் இது ரூ.21,999 க்கு அறிமுகமானது. அந்த நேரத்தில் அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனின் மீது ரூ.2000 தள்ளுபடி கிடைத்தது. அதே தள்ளுபடி லாவாவின் இயர் எண்ட் சேலிலிலும் கிடைக்கிறது.

விரிவான அம்சங்களை பொறுத்தவரை லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போனானது மேட் ஃபினிஷ் மற்றும் டபுள் ரெயின்ஃபோர்ஸ்டு கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடன் 3டி கிளாஸ் பேக் டிசைனுடன் வருகிறது. டூயல் நானோ சிம்-ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது எச்டிஆர், எச்டிஆர் 10 மற்றும் எச்டிஆர் 10 பிளஸ்-க்கான ஆதரவையும் கொண்டுள்ளது.
லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 7050 சிப்செட் மூலம் இயங்குகிறது. இந்த சிப்செட் உடன் இந்தியாவில் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். மேலும் இது ஸ்டாக் ஆண்ட்ராய்டு 13 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்குகிறது. லாவாவின் கூற்றுப்படி, இந்த ஓஎஸ்-ல் எந்த ப்ளோட்வேரும் இருக்காது.

கூடுதலாக லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போனிற்கு 3 ஆண்டுகளுக்கான காலாண்டு செக்யூரிட்டி அப்டேட்கள், ஆண்ட்ராய்டு 14 மற்றும் ஆண்ட்ராய்டு 15 அப்டேட் கிடைக்கும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, இதில் குவாட் ரியர் கேமரா யூனிட் உள்ளது.
அதில் 50 மெகாபிக்சல் 1.0-மைக்ரான் கேமரா சென்சார் + 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் + 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உள்ளன. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது.
கேமிங் அனுபவத்தை மேம்படுத்த அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போனில் எக்ஸ்-ஆக்சிஸ் லினியர் மோட்டார் ஹாப்டிக்ஸ் (X-Axis Linear Motor Haptics) சேர்க்கப்பட்டுள்ளது. விர்ச்சுவல் ரேம் அம்சத்தின் கீழ் இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம்-ஐ 16ஜிபி வரை விரிவாக்கம் செய்ய முடியும்
பேட்டரியை பொறுத்தவரை இது 66W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 4,700mAh யூனிட்டை பேக் செய்கிறது. லாவாவின் கூற்றுப்படி இது 16 நிமிடங்களுக்குள் ஸ்மார்ட்போனை பூஜ்ஜியத்திலிருந்து 50% வரை சார்ஜ் செய்யும். கடைசியாக இது 13 5ஜி பேண்டுகளை ஆதரிக்கிறது. இந்த் விலையில் இவ்வளவு 5ஜி பேண்டுகளை ஆதரிக்கும் முதல் ஸ்மார்ட்போன் இதுதான்
இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக லாவா பிளேஸ் 5ஜி (Lava Blaze 5G) ஸ்மார்ட்போனும் கூட தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. தற்போது லாவா பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.9,299 க்கும், 8ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ11,049 க்கும் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








