Home
Mobile

சிங்கிளாக கலக்க வரும் புதிய லாவா சோலோ ஸ்மார்ட்போன்!

By Super

சிங்கிளாக கலக்க வரும் புதிய லாவா சோலோ ஸ்மார்ட்போன்!
இன்டெல் மெட்ஃபீல்டு பிராசஸர் கொண்டு இயங்கும் சோலோ எக்ஸ்-900 ஸ்மார்ட்போனை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது லாவா நிறுவனம்.

இந்த ஸ்மார்ட்போன் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் இன்டெல் ஏட்டம் இசட்-2460 பிராசஸரையும் வழங்கும். 4.03 இஞ்ச் அகன்ற திரையை இந்த ஸ்மார்ட்போன் வழங்கும் என்பதால் இதில், 1024 X 600 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெற முடியும்.

பல மாதங்களாகவே இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அதற்கு தகுந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தொழில் நுட்பங்களையும் வழங்கும். இதன் 8 மெகா பிக்ஸல் கேமரா சிறப்பான புகைப்படங்களையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் கொடுக்கும்.

இந்த லாவா சோலோ எக்ஸ்-900 ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,000 இருக்கும் என்று முன்னதாக சில தகவல்கள் வெளியானாலும் இதன் உண்மையான விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை. அடுத்த வாரம் இந்தியாவில் வெளியாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலையும் கூடிய விரைவில் வெளியாகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X