இந்திய சந்தையில் லாவாவின் புதிய ஆன்ட்ராய்டு போன்

இந்திய மொபைல் நிறுவனமான லாவா நேற்று ஒரு புதிய ஆன்ட்ராய்டு போனைக் களமிறக்கி இருக்கிறது. இந்த போனுக்கு லாவா எக்ஸோலோ எ700 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வரும் இந்த போன் டூவல் சிம் வசதி கொண்டது. இந்த போனை பிலிப்கார்ட் ஆன்லைன் கடையி்ல ரூ.9,999க்கு வாங்கலாம். அதோடு இன்பிபீம் இந்த போனை 9,899க்கு விற்பனை செய்கிறது.
இந்த லாவா ஆன்ட்ராய்டு போனில் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளைப் பார்க்க முடியும். குறிப்பாக இந்த போனில் 4.5 இன்ச் அளவிலான ஐபிஎஸ் கப்பாசிட்டிவ் தொடுதிரை உள்ளது. இந்த திரை மிகவும் துல்லியமாக இருக்கும். மேலும் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வரும் இந்த போன் 1 ஜிஹெர்ட்ஸ் டூவோல் கோர் மீடியாடெக் எம்டி6577 ப்ராசஸர் கொண்டிருப்பதால் இது தாறுமாறான வேகத்தில் இயங்கும் என்று நம்பலாம்.
இந்த போனில் கேமரா வசதிகளும் சூப்பராக உள்ளன. அதாவது இந்த போனின் பின்புறம் 5எம்பி அளவில் ஆட்டோ போக்கஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு கேமரா உள்ளது. அதோடு விஜிஎ முகப்புக் கேமராவும் இந்த போனில் உள்ளது.
இந்த லாவா போன் 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி சேமிப்புடன் களம் இறங்கி இருக்கிறது. இதன் சேமிப்பை 32ஜிபி வரை விரிவு செய்ய முடியும். அதற்கா இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு வசதியும் உண்டு.
இணைப்பு வசதியைப் பொருத்தவரை இந்த போனில் 3ஜி எச்எஸ்பிஎ, வைபை, ப்ளூடூத், எஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி மற்றும் டூவல் சிம் சப்போர்ட் போன்ற வசதிகளையும் பார்க்கலாம். ஏராளமான வசதிகளுடன் வரும் இந்த லாவா போன் இந்திய ரசிகர்களைக் கவரும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications