Home
Mobile

டூவல் சிம் வசதி கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனைக் களமிறக்கும் லாவா

By Karthikeyan
டூவல் சிம் வசதி கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனைக் களமிறக்கும் லாவா

இந்திய மொபைல் நிறுவனமான லாவா சமீபத்தில் 2 மலிவு விலை ஸ்மார்ட்போன்களைக் களமிறக்கி இருந்தது. அந்த இரண்டு மலிவு விலை போன்களைத் தொடர்ந்து தற்போது ஒரு புதிய ஸ்மார்ட்போனைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனுக்கு எக்ஸோலோ எ900 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த புதிய ஸ்மார்ட்போனைப் பற்றிய தகவல்களை லாவா தனது பேஸ்புக்கின் ரசிகர்கள் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அந்த பக்கத்தில் சம்திங் நியூ, சம்திங் எக்ஸைட்டிங் என்ற வாசகத்தோடு இந்த ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது.

அதோடு இந்த போனிலிருக்கும் சிபியு மற்றும் ரேமின் அளவை லாவா ரசிகர்களே கண்டுபிடியங்கள் என்று ரசிகர்களுக்கு ஒரு சவாலையும் லாவா வழங்கி இருக்கிறது. மேலும் இன்பிபீன் ஆன்லைனில் இந்த போன் விற்பனைக்கு விரைவில் வர இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் இருக்கும் தொழில் நுட்பவசதிகள் லாவா ரசிகர்களைக் கவரும் வகையில் உள்ளன. குறிப்பாக இந்த போனில் 4.5 இன்ச் அளவு கொண்ட 16எம் வண்ண கப்பாசிட்டிவ் தொடு ஐபிஎஸ் டிஸ்ப்ளே உள்ளது. ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வரும் இந்த போன் 1ஜிஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி6577 ப்ராசஸர் மற்றும் 512எம்பி ரேம் போன்ற வசதிகளையும் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த போனின் பின்பக்கம் ஆட்டோ போக்கஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் வசதி கொண்ட 5எம்பி கேமராவும் முகப்பில் ஒரு விஜிஎ கேமராவும் உள்ளன. இந்த போனில் உள்ள 4ஜிபி மெமரியை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை அதிகரிக்க முடியும். இணைப்பு வசதிகளுக்கா இந்த போனில் வைபை, ப்ளூடூத், எஜிபிஎஸ், 3.5எம்எம் ஜாக் போன்றவை உள்ளன.

மேலும் இந்த போன் டூவல் சிம் வசதியையும் சப்போர்ட் செய்கிறது. இந்த போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதோடு இதன் களமிறங்கும் தேதியும் குறிப்பிடப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X