ரூ.6,999க்கு இந்திய ஸ்மார்ட்போன்.. போட்டியா வரும் சீன நிறுவன போன்: உங்கள் ஆதரவு யாருக்கு?

|

Tecno Phantom X2 5G அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா தனது எக்ஸ்3 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ் சீரிஸ் இல் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு மத்தியில் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னோ நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சில நாட்களுக்கும் முன்பு உலகளவில் வெளியிடப்பட்டது. அது டெக்னோ பாண்டம் எக்ஸ்2 5ஜி ஆகும். இந்த நிலையில் லாவா நிறுவனம் லாவா எக்ஸ்3 என்ற புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அதன் சொந்த நாடான இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Lava X3 விலை

Lava X3 விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ரூ.6,999 என்ற விலையில் ஆர்க்டிக் ப்ளூ, சார்கோல் ப்ளாக் மற்றும் லஸ்டர் ப்ளூ வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஆர்டர் டிசம்பர் 20 முதல் தொடங்குகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனை ப்ரீ ஆர்டர் செய்தால் ரூ.2,999 மதிப்புள்ள Lava ProBuds N11 நெக்பேண்டை இலவசமாக வாங்கலாம்.

ரூ.6,999க்கு இந்திய ஸ்மார்ட்போன்.. போட்டியா வரும் சீன நிறுவன போன்!

Lava X3 ஸ்மார்ட்போனானது HD+ தெளிவுத்திறனுடன் உடன் கூடிய 6.5 இன்ச் IPS டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. டிஸ்ப்ளேவின் மேற்புறத்தில் வாட்டர் டிராப் நாட்ச் வசதியோடு கூடிய செல்பி கேமரா மற்றும் தடிமனான பெசல்கள் இருக்கிறது. டேப்லெட் வடிவில் பின்புற கேமரா உடன் கைரேகை ஸ்கேனர் ஆதரவும் இதில் இருக்கிறது. இதில் 8எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 5 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Lava X3 ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு இருக்கிறது. இதில் 4000 எம்ஏஎச் பேட்டரி உடன் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் ஓஎஸ் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. யூஎஸ்பி டைப்-சி போர்ட், 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை மற்றும் ஜிபிஎஸ் இணைப்பு ஆதரவுகள் இதில் இருக்கிறது.

Tecno Phantom X2 சீரிஸ் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதாவது இதில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு இதில் வழங்கப்பட்டுள்ளது. 5ஜிபி விர்ச்சுவல் ரேமிற்கான ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மார்ஸ் ஆரஞ்ச் மற்றும் ஸ்டார்டஸ்ட் க்ரே வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது.

ரூ.6,999க்கு இந்திய ஸ்மார்ட்போன்.. போட்டியா வரும் சீன நிறுவன போன்!

Tecno Phantom X2 சீரிஸ் ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 9000 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சீரிஸ் இல் இடம்பெற்றுள்ள இரண்டு மாடல்களிலும் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. முழு எச்டி+ தெளிவுத்திறன் உடன் கூடிய 6.8 இன்ச் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் அமோலெட் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. பஞ்ச் ஹோல் கட்அவுட் உடன் கூடிய வளைந்த டிஸ்ப்ளே இதில் இருக்கிறது. 360 ஹெர்ட்ஸ் டச் மாதிரி ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு இதில் வழங்கப்பட்டிருக்கிறது.

Tecno Phantom X2 சீரிஸ் ஸ்மார்ட்போனில் 5160 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்த போனை 20 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான HiOS 12.0 இதில் இயக்கப்படுகிறது.

Tecno Phantom X2 சீரிஸ் இல் இரண்டு மாடல்கள் இடம்பெற்றிருக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பெரும்பாலான அம்சங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், கேமரா பிரிவில் மட்டும் மாறுபட்டு இருக்கிறது. Phantom X2 Pro ஸ்மார்ட்போனில் 50 எம்பி பிரைமரி கேமரா 50 எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ் மற்றும் 12 எம்பி அல்ட்ராவைட் கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 32 எம்பி செல்பி கேமரா இருக்கிறது. Phantom X2 ஸ்மார்ட்போனில் 2 எம்பி மேக்ரோ கேமரா, 13 எம்பி அல்ட்ராவைட் கேமரா மற்றும் OIS ஆதரவுடன் கூடிய 64MP முதன்மை கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமரா இருக்கிறது.

அம்சங்களை வைத்தே கணித்து விடலாம் டெக்னோ பாண்டம் எக்ஸ்2 ப்ரீமியம் விலையில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்கள் என்று. இருப்பினும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் எக்ஸ் சீரிஸ் இன் கீழ் அறிமுகமாகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இரண்டில் எந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக வரவேற்பு பெறுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Lava X3 Vs Tecno Phantom X2 5G: Lava X3 Vs Tecno Phantom X2 5G: Which one is Worth of Money?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X