அடுத்த வாரம் அறிமுகமாகும் இந்திய நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்மார்ட்போன்.! முன்பதிவு எப்போது?

|

லாவா நிறுவனம் அடுத்த வாரம் லாவா எக்ஸ்3 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் அருமையான வடிவமைப்பு மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. தற்போது இந்த லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் முன்பதிவு குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது வரும் டிசம்பர் 20-ம் தேதி மதியம் 12-ம் தேதி லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் முன்பதிவு செய்ய முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு Lava Probuds N11 Neckband இலவசமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போன் கருப்பு, நீலம், பச்சை நிறங்களில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அடுத்த வாரம் அறிமுகமாகும் இந்திய நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்.!

லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த லாவா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்த மிகவும் அருமையாக அருமையாக இருக்கும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம்
செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் 4ஜி ஆதரவு உள்ளதா? அல்லது 5ஜி ஆதரவு உள்ளதா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் இந்நிறுவனம் தற்போது 5ஜி போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. எனவே இந்த போன் 5ஜி ஆதரவுடன் வெளிவர வாய்ப்பு உள்ளது. அதேபோல் இனிமேல் பல நிறுவனங்கள் 5ஜி போன்களை மட்டுமே அதிகமாக அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் 5ஜி சேவை வந்துவிட்டது.

அடுத்த வாரம் அறிமுகமாகும் இந்திய நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்.!

லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா ஆதரவு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

பட்ஜெட் விலைக்கு தகுந்த சிப்செட் வசதி தான் இதில் உள்ளது. அதாவது 2ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் ஆதரவுடன் இந்த லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் ஆனது 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் அறிமுகமாகும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு பாஸ்ட் சார்ஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும். இதுதவிர கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.

அடுத்த வாரம் அறிமுகமாகும் இந்திய நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்.!

குறிப்பாக 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. பின்பு யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த லாவா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

Best Mobiles in India

English summary
Lava X3 Smartphone Pre-Booking From 20th December: Launch Next Week: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X