இலவசத்தோடு அடிமட்ட விலைக்கு விற்பனையாகும் Lava X3.! இப்படி விற்றால் கம்பெனி என்னாகும்?

|

இந்தியாவில் இதுவரை யாருமே - ஏன் நீங்களே கூட இதற்கு முன் வரை இப்படி ஒரு மலிவு விலையில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்கி இருக்கவே முடியாது. அடிமட்ட விலையில் டீசெண்டான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட புது ஸ்மார்ட்போன் சாதனம் தான் இந்த Lava X3 டிவைஸ்.

இந்த Lava X3 போனை நிறுவனம் அடிமட்ட விலைக்கு அறிமுகம் செய்தது மட்டுமின்றி, இத்துடன் கூடுதலாக நிறுவனம் அதன் ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன்ஸ் சாதனத்தையும் உங்களுக்கு இலவசமாக வழங்குகிறது என்பது தான் நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது. இந்த இலவசத்தின் மதிப்போடு, இந்த போனின் விலையை ஒப்பிட்டுப் பார்க்கையில் எப்படி கம்பெனிக்கு இது கட்டுப்படியாகும் என்ற சந்தேகம் நமக்குள் எழுகிறது.

இலவசத்தோடு அடிமட்ட விலைக்கு விற்பனையாகும் Lava X3.! விட்றாதீங்கப்பா.!

சரி, வாங்க இந்த போனின் விலை என்ன? என்ன மதிப்பிலான இலவசங்கள் உங்களுக்குக் கிடைக்கிறது? இந்த போனை நம்பி வாங்கலாமா? வேண்டாமா? என்பது போன்ற அணைத்து விபரங்களையும் பார்க்கலாம். லாவா நிறுவனம் இந்த வார தொடக்கத்தில், இந்திய சந்தையில் Lava X3 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்திய நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட Lava X2 இன் வாரிசுதான் இந்த Lava X3.!

லாவா எக்ஸ்3 என்பது மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட் மூலம் இயக்கப்படும் ஒரு நுழைவு நிலை ஸ்மார்ட்போன் மாடல் ஆகும். Lava X3 தற்போது Amazon வழியாக முன்கூட்டிய ஆர்டர் செய்யக் கிடைக்கிறது. சமீபத்திய லாவா எக்ஸ்-சீரிஸ் ஸ்மார்ட்போனுக்கான அமேசான் பட்டியல் இப்போது நாட்டில் இந்த சாதனம் டிசம்பர் 27 முதல் விற்பனைக்கு வரும் என்பதை தெரிவிக்கிறது.

இத்துடன் அறிமுக விற்பனையின் சிறப்பு சலுகையாக, நிறுவனம் சில இலவச பொருட்களையும் போனுடன் சேர்த்து வழங்குகிறது. இந்தியாவில் Lava X3 விலை 3GB + 32GB வேரியண்ட் மாடலுக்கு வெறும் ரூ.6999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மலிவு விலையுடன் இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 27 முதல் Amazon வழியாகப் பிரத்தியேகமாக வாங்குவதற்குக் கிடைக்கும்.

இப்போதே இந்த லாவா எக்ஸ்3 போனை அமேசானில் முன்கூட்டிய ஆர்டர் செய்பவர்களுக்கு நிறுவனம், லாவா ப்ரோபட்ஸ் என்11 நெக்பேண்டை (Lava Probuds N11 neckband) இலவசமாக வழங்குகிறது. இதன் மதிப்பு ரூ. 2299 ஆகும். சரி, இந்த புதிய Lava X3 ஸ்மார்ட்போன் அம்சங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம். வெறும் 6999 ரூபாய் மதிப்பிற்கு இதில் உள்ள அம்சங்கள் எல்லாம் எப்படி உள்ளது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Lava X3 சிறப்பம்சம்
6.5' இன்ச் 1600 × 720 பிக்சல் கொண்ட HD+ IPS LCD டிஸ்ப்ளே
60Hz ரெப்ரெஷ் ரேட் உடன் வாட்டர் டிராப் நாட்ச்
டூயல் பின்புற கேமரா அமைப்பு
8MP பிரைமரி கேமரா
VGA இரண்டாம் நிலை சென்சார்
LED ஃபிளாஷ்
5MP முன்பக்க ஷூட்டர்
குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ A22 சிப்செட்
IMG PowerVR GPU
3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
512 ஜிபி மைக்ரோ-எஸ்டி கார்டு ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 12 (Go edition)
கைரேகை ஸ்கேனர் மற்றும் பேஸ் அன்லாக்
டூயல் சிம் - 4ஜி
வைஃபை 802.11 ஏசி
புளூடூத் 5.1
ஜிபிஎஸ் மற்றும் குளோனாஸ்
10W சார்ஜிங் ஆதரவு
4000mAh பேட்டரி
நிறம்: லஸ்டர் ப்ளூ, ஆர்க்டிக் ப்ளூ மற்றும் சார்கோல் பிளாக்
விலை: ரூ. 6,999 மட்டுமே.

ரெட்மி ஏ1, ரெட்மி ஏ1+, டெக்னோ பாப் 6 ப்ரோ மற்றும் லாவா பிளேஸ் ஆகியவற்றை இயக்கும் அதே சிப்செட் தான் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது போக, நிறுவனம் Lava X3 போனுக்கான இலவச ஹோம் சர்வீஸ் ப்ரோக்ராம் திட்டத்தையும் வழங்குகிறது. ரூ.7000 விலைக்குள் ரூ. 2299 மதிப்புள்ள இலவச நெக்பேண்ட் உடன் கிடைக்கும் இந்த Lava X3 போனை தவறவிடாதவர்கள் பாக்கியசாலிகள் ஆவார்கள்.

Best Mobiles in India

English summary
Lava X3 Smartphone Go for Sale With Free Lava Probuds N11 Neckband in India from December 27

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X