Home
Mobile

தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்த இந்திய ஸ்மார்ட்போன்: என்னென்ன அம்சங்கள்?

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா தனது எக்ஸ்3 ஸ்மார்ட்போனை அறிமுகம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்தது. இந்நிலையில் இதன் முதல் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. அதுவும் சில தள்ளுபடிகளுடன் இந்த லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் வாங்கக் கிடைக்கிறது.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட லாவா எக்ஸ்3 (2022) ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போனை ரூ.6,550-விலையில் வாங்க முடியும். மேலும் அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்த இந்திய ஸ்மார்ட்போன்.!

ஆர்க்டிக் ப்ளூ, சார்கோல் பிளாக் மற்றும் லஸ்டர் ப்ளூ நிறங்களில் இந்த புதிய லாவா எக்ஸ்3 (2022) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள. மேலும் இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் 6.53-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1600 × 720 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த லாவா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Lava X3 ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் ஆப்புகளைத் தடையின்றி பயன்படுத்த உதவுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் ஓஎஸ் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் 8எம்பி பிரைமரி கேமரா + 2எமபி விஜிஏ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்த இந்திய ஸ்மார்ட்போன்.!

லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் ஆனது 4000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனில் IMG PowerVR GPU ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கைரேகை ஸ்கேனர் மற்றும் பேஸ் அன்லாக், டூயல் சிம் - 4ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், குளோனாஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் மாடல். இதில் 5ஜி ஆதரவு மட்டும் தான் இல்லை மற்றபடி அனைத்து சிறப்பு அம்சங்களையும் வழங்குகிறது இந்த அசத்தலான லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன். அதேபோல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் லாவா நிறுவனம் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

Best Mobiles in India

English summary
Lava X3 (2022) smartphone goes on sale in India today: Price, Offers and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X