இந்திய பட்ஜெட் சந்தையில் புதிய அதிரடி வரவு : லாவா எக்ஸ்10.!!

By Meganathan
|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் ரகத்தில் ஆயிரக்கணக்கான கருவிகள் கொட்டி கிடந்தாலும் 4ஜி எல்டிஈ கொண்ட தலைசிறந்த ஒரு கருவி இருக்கின்றது. புதிய லாவா எக்ஸ்10 என்ற பெயரில் 3ஜிபி ரேம் கொண்ட இந்த கருவியானது இந்தியாவில் ரூ.11,500க்கு கிடைக்கின்றது.

மல்டி டாஸ்கிங் செய்ய ஏதுவாக இருக்கும் இந்த கருவியின் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் போன்றவை நேர்த்தியாகவே வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட இந்த கருவியானது குறைந்த விலையில் கருவிகளை வழங்கும் சியோமி, லெனோவோ, மைக்ரோமேக்ஸ், இன்டெக்ஸ் போன்ற கருவிகளுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது. அப்படி இந்த கருவியில் என்ன சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை ஸ்லைடர்களில் பாருங்கள்.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மூலம் பாதுகாக்கப்படுகின்றது. வைப்ரன்ட் நிறங்களை கொண்ட டிஸ்ப்ளே எழுத்துகளை வெயிலிலும் தெளிவாக காட்டுகின்றது.

3ஜிபி ரேம்

3ஜிபி ரேம்

அதிவேக செயல்பாட்டிற்கு வழி செய்யும் 3ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளதோடு அதிக கிராஃபிக் கொண்ட கேம்களை விளையாடும் போதும் கருவி சூடாகாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

4ஜி எல்டிஈ

4ஜி எல்டிஈ

லாவா எக்ஸ்10 டூயல் சிம் ஸ்மார்ட்போன் இரு சிம்களிலும் 4ஜி எல்டிஈ சப்போர்ட் செய்வல் அதிவேக நெட்வர்க் பயன்பாடுகளை வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேமரா

கேமரா

13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் டூயல் டோன் ப்ளாஷ் கொண்டுள்ளதால் இந்த கருவியை கொண்டு அனைத்து வித வெளிச்சங்களிலும் சிறப்பான புகைப்படம் எடுக்க முடியும். மேலும் இந்த கேமரா ஃபுல் எச்டி வீடியோக்களை பதிவு செய்து, ப்ளேபேக் செய்யும் திறன் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதோடு லைவ் போட்டோ எடுக்கும் அம்சம் வழங்கப்பட்டுள்ளதால் புகைப்படம் எடுக்கும் முன்பும் பின்பும் சேர்த்து சிறிய வீடியோவும் பதிவு செய்யப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

செல்பீ

செல்பீ

5 எம்பி செல்பீ கேமரா மற்றும் 84-டிகிரி வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளதால் சிறப்பான செல்பீ எடுக்க முடியும்.. வைடு ஆங்கிள் லென்ஸ் இருப்பதால் க்ரூப் செல்பீ எடுப்பதும் சுலபமான காரியமே.

பிரசஸர்

பிரசஸர்

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் எம்டி6735 சிபியு மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் வேகம் கொண்டுள்ளது. இதோடு 3ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளதால் மல்டி டாஸ்கிங் செய்வதும் வேகமாகவே இருக்கும்.

பேட்டரி

பேட்டரி

2900 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருப்பதால் இந்த கருவியானது சுமார் 209 மணி நேரம் வரை ஸ்டான்ட்பை டைம் மற்றும் 3ஜி வேகத்தில் சுமார் 18 மணி நேரம் வரை ஸ்டான்ட்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மென்பொருள்

மென்பொருள்

லாவா எக்ஸ்10 கருவியானது ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளம் கொண்டு இயங்குவதோடு ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ அப்டேட் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெமரி

மெமரி

இந்த கருவியில் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

4ஜி ஆப்ஷனை தவிற லாவா எக்ஸ்10 கருவியில் வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ், ஓடிஜி சப்போர்ட் மற்றும் 3ஜி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதோடு அட்வான்ஸ்டு ஜெஸ்ட்யூர் அம்சங்களும் ஸ்மார்ட் ஜெஸ்ட்யூர் அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Lava X10: Did Some Say Android Heavyweight Killer? 10 Points to Prove

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X