Home
Mobile

வெச்சான் பாரு லாவா.. ரூ.8999 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 10W சார்ஜிங்.. 90Hz டிஸ்பிளே.. 2TB மெமரி.. எந்த மாடல்?

லாவா நிறுவனத்தில் பட்ஜெட் மாடலாக லாவா விராட் வி1 (Lava Virat V1) ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. ரூ.10,000 பட்ஜெட்டில் வெளியாகி இருந்தும், கூடுதலாக சலுகை போக அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. இந்த லாவா விராட் வி1 ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

லாவா விராட் வி1 அம்சங்கள் (Lava Virat V1 Specifications): ஆக்டா கோர் யுனிசோக் 9863ஏ (Octa Core UNISOC 9863a) சிப்செட் கொண்ட மாடலாக இந்த லாவா விராட் வி1 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. பட்ஜெட் மாடலாக இருப்பதால் ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் (Android 15 Go Edition) ஓஎஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, மீடியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம்.

வெச்சான் பாரு லாவா.. ரூ.8999 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 10W சார்ஜிங்!

எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த லாவா விராட் வி1 ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 20:9 அஸ்பெக்ட் ரேசியோ கிடைக்கிறது. 2.5D கிளாஸ் டிசைன் கொடுத்துள்ளது. பட்ஜெட்டுக்கு ஏற்ப நாட்ச் டிசைன் கிடைக்கிறது.

16 மில்லியன் கலர் டெப்த் கொண்ட டிஸ்பிளேவாக இது இருக்கிறது. மேலும், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது. 13 எம்பி மெயின் கேமராவை இந்த லாவா விராட் வி1 ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது. எச்டி வீடியோ ரெக்கார்டிங் மற்றும் செல்பீ, வீடியோ கால்களுக்காக 5 எம்பி ப்ரன்ட் கேமராவை பேக் செய்துள்ளது.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மாடலாக விற்பனைக்கு கிடைக்கிறது. 256 ஜிபி மெமரி சப்போர்ட் கொடுக்க இருக்கிறது. இதற்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Cars Slot) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 8.5 எம்எம் தடிமன் பாடியில் 5000mAh பேட்டரியை இந்த லாவா விராட் வி1 ஸ்மார்ட்போன் பேக் செய்து கொடுத்துள்ளது.

10W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் சார்ஜர் கொண்ட மாடலாகவும் இந்த லாவா விராட் வி1 ஸ்மார்ட்போன் இருக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பீச்சர்களுடன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆக இருக்கிறது. இதுவே மலிவான விலையாக இருக்கிறது.

ஆனால், அறிமுக சலுகையில் ரூ.8,999 விலைக்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். லாவா தளத்திலும் விற்பனைக்கு கிடைக்கிறது. ஜூலை 31ஆம் தேதி வரையில் மட்டுமே இந்த ரூ.1,000 அறிமுக சலுகையில் வாங்கி கொள்ள கிடைக்கும். பிறகு ரூ.9999 விலையில் மட்டுமே இந்த லாவா விராட் வி1 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

4ஜி எல்டிஇ, வை-பை, ப்ளூடூத் போன்ற வழக்கமாக கனெக்டிவிட்டியை பெற்று கொள்ளலாம். டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொடுக்கப்பட்டு உள்ளது. நீலகிரி ப்ளூ (Nilgiri Blue), ஹிமாலயன் சில்வர் (Himalayan Silver) ஆகிய 2 கலர்களில் இந்த லாவா விராட் வி1 ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Lava Virat V1 With 4GB RAM Launched Under Rs 10000 in India Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X