பொளக்குது விற்பனை.. ரூ.9499 போதும்.. 5000mAh பேட்டரி.. 10W சார்ஜிங்.. 13MP கேமரா.. 90Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் ரூ.10,000 பட்ஜெட்டில் வெளியாகும் ஸ்மார்ட்போன்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு இருக்கிறது. இதில் லாவா (LAVA) நிறுவனமானது, பிரீமியம் டிசைனை கொடுப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது. இதனால், டிமாண்ட் ஏற்பட்டு காத்திருந்து ஆர்டர் செய்ய வேண்டி இருக்கிறது.
இப்படி லாவா விராட் வி1 (LAVA Virat V1) ஸ்மார்ட்போனும் ரூ.10,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் வெளியாகி, விற்பனைக்கு வந்த ஓரிரு நாட்களிலேயே முழுவதும் விற்றுத் தீர்ந்தது. இதனால், மீண்டும் எப்போது விற்பனைக்கு வரும் என்று பட்ஜெட் பிரியர்கள் காத்திருந்தனர். இவர்களுக்கு நேரம் பிளிப்கார்ட் தளத்தில் வந்துவிட்டது. தள்ளுபடி போக மேலும் மலிவாக கிடைக்கிறது.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.9,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து ரூ.500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதை தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் வழியாக பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, ரூ.9,499 விலைக்கு இந்த லாவா விராட் வி1 ஸ்மார்ட்போனை வாங்கலாம். நீலகிரி ப்ளூ (Nilgiri Blue), ஹிமாலயன் சில்வர் (Himalayan Silver) கலர்களில் கிடைக்கிறது.
லாவா விராட் வி1 அம்சங்கள் (Lava Virat V1 Specifications): 6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. 20:9 அஸ்பெக்ட் ரேசியோ மற்றும் 2.5D கிளாஸ் டிசைனை கொடுத்துள்ளது. 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் உள்ளது.
வாட்டர் டிராப் நாட்ச் டிசைனில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த விலைக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் யுனிசோக் 9863ஏ (Octa Core UNISOC 9863a) சிப்செட் கொடுத்துள்ளது.
ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் (Android 15 Go Edition) கொண்ட மாடலாக இந்த லாவா விராட் வி1 விற்பனைக்கு கிடைக்கிறது. 5 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது.
13 எம்பி மெயின் கேமரா மற்றும் எச்டி வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 256 ஜிபி மெமரி சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் கொடுத்து இருக்கிறது. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Cars Slot) கிடைக்கிறது.
10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரியை கொடுத்து இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.5 எம்எம் தடிமன் கிடைக்கிறது. டைப்-சி கேபிள் (Type-C Cable) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைத்துள்ளது. ஓடிஜி சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் கொண்ட மாடலாக இந்த லாவா விராட் வி1 இருக்கிறது.
ப்ளூடூத் வி4.2 (Bluetooth V4.2), வை-பை 802.11 பி (Wi-Fi 802.11 b) கனெக்டிவிட்டியை கொடுக்கிறது. போர்ட்ராய்டு, ஸ்லோவ் மோஷன், டைம்லேப்ஸ், ரீபோகஸ், ஆடியோ நோட், மோஷன் போட்டோ, பியூட்டி, எச்டிஆர் உள்ளிட்ட கேமரா பீச்சர்களுடன் இந்த லாவா விராட் வி1 கிடைக்கிறது. இதில் 5ஜி மாடலும் இருக்கிறது. அது கூடுதல் விலைக்கு விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications