பொசுக்குனு பட்ஜெட்.. ஜூலை 24-க்கு வருது புது LAVA போன்.. 5000mAh பேட்டரி.. 13MP கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலை மாடலாக லாவா விராட் வி1 (Lava Virat V1) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. பிரீமியம் லுக்கை பட்ஜெட்டில் விரும்பும் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இந்த விராட் வி1 இருக்கும்.
வருகிற ஜூலை 24ஆம் தேதியில் லாவா விராட் வி1 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. விராட் சீரிஸில் இந்த மாடலுடன் லாவா விராட் வி1 5ஜி (Lava Virat V1 5G) ஸ்மார்ட்போனும் வெளியாக இருக்கிறது. ஆகவே, இது 4ஜி மாடலாக இருப்பதால், விலை பட்ஜெட்டில் இருக்கும். ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் வெளியாக வாய்ப்புள்ளது.

ஆனால், டிசைன் மற்றும் கலர் ஆப்ஷன்களை பார்த்தால், பட்ஜெட் மாடல் போல தோன்றாது. இதனாலேயே எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இதுபோக டிஸ்பிளே, கேமரா, பேட்டரி போன்ற பீச்சர்களும் பட்ஜெட்டில் பட்டையை கிளப்பி இருக்கின்றன. முதலில் பீச்சர்களை பார்த்துவிட்டு பிறகு விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
லாவா விராட் வி1 அம்சங்கள் (Lava Virat V1 Specifications): ஆக்டா கோட் யுனிசோக் எஸ்சி9863ஏ (UNISOC SC9863A) சிப்செட் கொண்ட மாடலாக இருக்கிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வெளியாக இருக்கிறது. 4 ஜிபிக்கான விர்ச்சுவல் (Virtual) ரேம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, 8 ஜிபிக்கான அவுட்புட்டை பெற்று கொள்ளலாம்.
13 எம்பி மெயின் கேமரா + செகண்டரி லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) கொண்ட மாடலாக இந்த லாவா விராட் வி1 ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களை செய்து கொள்ள 5 எம்பி கேமராவை பேக் செய்துள்ளது. வாட்டர் டிராப் நாட்ச் (Water Drop Notch) டிசைனில் கிடைக்க இருக்கிறது.
6.75 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொடுக்க இருக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக இந்த லாவா விராட் வி1 ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. மேலும், நீலகிரி ப்ளூ (Nilgiri Blue) மற்றும் இமாலயன் சில்வர் (Himalayan Silver) ஆகிய கலர்களில் பிரீமியம் லுக் கொடுக்கிறது.
பேஸ் அன்லாக் (Face Unlock) மட்டுமல்லாமல், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கோ எடிஷன் (Android 15 OS Go Edition) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ப்ரீ-ஹோம் சர்வீஸ் சப்போர்ட் கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது. இந்த பீச்சர்கள் பிளிப்கார்ட் தளத்தில் உறுதியாகி இருக்கின்றன.
ஆகவே, ஜூலை 24ஆம் தேதி வெளியீட்டுக்கு பிறகு பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த மாடலுடன் வெளியாக இருக்கும் லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் யுனிசோக் டி8200 (Octa Core UNISOC T8200) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Andorid 16 OS) கிடைக்கிறது. 6000mAh பேட்டரி கொண்ட மாடலாக இருக்கப் போகிறது.


Click it and Unblock the Notifications