Home
Mobile

சீன நிறுவனங்கள் கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க.. பட்ஜெட் விலையில் புது Lava 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

சீன நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களின் விலை உயர்த்தி வரும் நிலையில், லாவா நிறுவனம் தொடர்ந்து கம்மி பட்ஜெட்டில் 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இன்று லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி (Lava Virat V1 Pro 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது லாவா நிறுவனம். இதன் விலை மற்றும் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Lava Virat V1 Pro 5G specifications): 6.75-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் புதிய லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

பட்ஜெட் விலையில் புது Lava 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

யுனிசாக் டி8200 சிப்செட் (Unisoc T8200 chipset)உடன் புதிய லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட சிபியு மற்றும் ஜிபியு வேகத்தை வழங்கும்.

6ஜிபி ரேம் (6ஜிபி விர்ச்சுவல்) + 128ஜிபி மெமரி உடன் லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா உடன் லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். இதன் செல்பி கேமரா விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனாலும் இந்த போன் 5எம்பி அல்லது 8எம்பி செல்பி கேமராவுடன் விற்பனைக்கு வரும்.

ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதுவும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லாவா ஸ்மார்ட்போன்.

6000எம்ஏஎச் பேட்டரி உடன் லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

பட்ஜெட் விலையில் புது Lava 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன். மேலும் 5ஜி, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 5.4, வைஃபை 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 207 கிராம் ஆகும். சிக்கிம் மிட்நைட் ( Sikkim Midnight) மற்றும் ஸ்பிட்டி ஃப்ரோஸ் (Spiti Fros) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Lava Virat V1 Pro 5G smartphone launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X