புது போன் வாங்கபோறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! ஆகஸ்ட் 24-ல் வரும் புதிய Lava 5ஜி போன்.. எந்த மாடல்?
லாவா நிறுவனம் லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி (Lava Virat V1 Pro 5G) ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். இந்நிலையில் இந்த லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.
லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Lava Virat V1 Pro 5G Specifications): 6.75-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600x720 பிக்சல்ஸ்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த யுனிசாக் டி8200 சிப்செட் (Unisoc T8200 chipset) உடன் புதிய லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதேபோல் கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த புதிய போனில் உள்ளது.
8ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி ஆதரவுடன் லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
50எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா உடன் லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி அல்லது 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளியாகும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லாவா நிறுவனம்.
IP54 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (IP54 dust and splash resistance) உடன் லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி போனின் பேட்டரி விவரங்கள் வெளியாகவில்லை. ஆனாலும் இந்த போன் 6000எம்ஏஏச் அல்லது 6500எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி, 4ஜி, வைஃபை 5, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி போன் கம்மி பட்ஜெட்டில் அறிமுகமாகும்.
mage Credit: X/ @Lava Mobiles, beebom, lava


Click it and Unblock the Notifications