பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026.. 6000mAh பேட்டரி, 50MP கேமரா, ஆஃபரில் லாவா 5ஜி போன்.. எந்த மாடல்?
சில வாரங்களுக்கு முன்பு லாவா நிறுவனம் லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி (Lava Virat V1 Pro 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இந்நிலையில் இந்த புதிய லாவா போன் தள்ளுபடி விலையில் கிடைக்க உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது ரூ.15,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வரும் அக்டோபர் 9-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற உள்ள பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart's Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனையில் இந்த லாவா 5ஜி போன் ரூ.14,749 விலையில் வாங்க கிடைக்கும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். ஆகவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Lava Virat V1 Pro 5G specifications): யுனிசாக் டி8200 சிப்செட் (Unisoc T8200 chipset)உடன் புதிய லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட சிபியு மற்றும் ஜிபியு வேகத்தை வழங்கும்.
6.75-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் புதிய லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.
6ஜிபி ரேம் (6ஜிபி விர்ச்சுவல்) + 128ஜிபி மெமரி உடன் லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
50எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா உடன் லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் இந்த போன் 8எம்பி செல்பி கேமராவுடன் விற்பனைக்கு வரும்.
லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதுவும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லாவா ஸ்மார்ட்போன்.

6000எம்ஏஎச் பேட்டரி உடன் லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன். 5ஜி, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 5.4, வைஃபை 5, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன. லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி போனின் எடை 207 கிராம் ஆகும்.


Click it and Unblock the Notifications
