Home
Mobile

ஜூலை 24-க்கு அப்புறம் இதுதான்.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 120Hz டிஸ்பிளே.. 13MP கேமரா.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களையும் தூக்கி சாப்பிடும்படி, இந்தியாவின் லாவா மொபைல்ஸ் (Lava Mobiles) நிறுவனம், லாவா விராட் வி1 5ஜி (Lava Virat V1 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த வெளியீட்டுக்கு முன்பே பேட்டரி, டிஸ்பிளே, சிப்செட் உள்ளிட்ட பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. அதேபோல விற்பனை விவரங்களும் தெரிய வந்துள்ளன.

வருகின ஜூலை 24ஆம் தேதியன்று லாவா விராட் சீரிஸ் மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இதில் லாவா விராட் வி1 (Lava Virat V1) மற்றும் லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் பெரிய பேட்டரி மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட மாடலாக லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் இருப்பதால் தனி கவனம் பெற்றுள்ளது.

ஜூலை 24-க்கு அப்புறம் இதுதான்.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. மாடல்?

பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, இந்த தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு முக்கிய பீச்சர்கள் உறுதியாகி வருகின்றன. இப்போது, பட்ஜெட்டை தவிர மற்ற பீச்சர்கள் தெரிய வந்துள்ளன. பேட்டரி, சிப்செட், டிஸ்பிளே, கேமரா மற்றும் டிசைன் உள்ளிட்ட ஒட்டுமொத்த விவரங்களையும் பார்த்து கொள்ள முடிகிறது.

லாவா விராட் வி1 5ஜி அம்சங்கள் (Lava Virat V1 5G Specifications): 6.75 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. பட்ஜெட் மாடலாக இருப்பதால், வாட்டர் டிராப் நாட்ச் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.

8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. ஆக்டா கோர் யுனிசோக் டி8200 (Octa Core UNISOC T8200) சிப்செட் கொண்ட மாடலாக இந்த லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (Dust Resistance), வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Water Resistance) கொடுக்க ஐபி64 ரேட்டிங் உள்ளது.

13 எம்பி ஏஐ டுயல் கேமரா (AI Dual Camera) கொண்ட மாடலாக இந்த லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கா 5 எம்பி செல்பீ ஷூட்டர் கேமராவை கொடுத்துள்ளது. 6000mAh பேட்டரியை கொடுத்து இருக்கிறது. 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது. பட்ஜெட் விவரங்கள் வெளியாகவில்லை.

இருப்பினும், ரூ.15,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. ஆர்யா ப்ளூ (Arya Blue) மற்றும் சோனார் கோல்டு (Sonar Gold) ஆகிய கலர்களில் இந்த லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே தெரியவந்துள்ளன. அதேபோல ஒட்டுமொத்த பீச்சர்களும் பிளிப்கார்ட் தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளன.

லாவா மொபைஸ் நிறுவனத்தின் விராட் சீரிஸ் மாடல்களில் முதலாவதாக வெளியாகும் ஸ்மார்ட்போன்களாக இந்த லாவா விராட் வி1 மற்றும் லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன்கள் கிடைக்க இருக்கிறது. ஆகவே, அறிமுக சலுகையில் கிடைக்க வாய்ப்புள்ளது, அதேபோல குவாலிட்டியும் பக்காவாக இருக்கும். பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Lava Virat V1 5G With 6000mAh Battery Specifications Confirmed Ahead Of July 24 Launch in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X