Home
Mobile

யாரு சாமி அவன்.. வெறும் ரூ.11,999 போதும் 6000mAh பேட்டரி.. 10W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 8GB ரேம்.. எந்த மாடல்?

லாவா மொபைல்ஸ் நிறுவனத்தின் புதிய விராட் சீரிஸ் மாடல்களின் கீழ் லாவா விராட் வி1 5ஜி (Lava Virat V1 5G) அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. நம்ப முடியாத பட்ஜெட் விலையில் 6000mAh பேட்டரி, 10W ஃபாஸ்ட் சார்ஜிங், 8 ஜிபி ரேம், 2 டிபி மெமரி போன்ற நம்ப முடியாத பீச்சர்களை கொடுக்கிறது.

லாவா விராட் வி1 5ஜி அம்சங்கள் (Lava Virat V1 5G Specifications): 6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவுடன் இந்த லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. 2.5D கிளாஸ் மற்றும் நாட்ச் டிசைனுடன் வெளியாகி இருக்கிறது.

யாரு சாமி அவன்.. வெறும் ரூ.11,999 போதும் 6000mAh பேட்டரி.. மாடல்?

260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா + செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 5 எம்பி செகண்டரி ப்ரன்ட் கேமரா கிடைக்கிறது. இதில் ஸ்கிரீன் பிளாஷ் சப்போர்ட் கிடைக்கிறது. ரியர் கேமராவில் எச்டி வீடியோ ரெக்கார்டிங் (HD Video Recording) செய்து கொள்ளலாம்.

மற்ற லாவா ஸ்மார்ட்போன்களில் கிடைப்பதை போலவே போர்ட்ராய்டு (Portrait), ஸ்லோவ் மோஷன் (Slow Motion), டைம் லேப்ஸ் (Timelapse), ரீபோகஸ் (Refocus), ஆடியோ நோட் (Audio Note), மோஷன் போட்டோ (Motion Photo), பியூட்டி (Beauty) மற்றும் எச்டிஆர் (HDR) போன்ற மோட்கள் கிடைக்கிறது. நைட் (Night) மற்றும் ஏஐ மோட் (AI Mode) உள்ளது.

மேலும், பனோரமா (Panorama) கிடைக்கிறது. யுனிசோக் டி8200 ஆக்டா கோர் (UNISOC T8200 Octa Core) சிப்செட்டை இந்த லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மாடலாக இந்த லாவா விராட் வி1 5ஜி கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கிறது.

ஆகவே, 8 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொடுத்துள்ளது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 6000mAh பேட்டரியுடன் கிடைக்கிறது.

185 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். 340 மணி நேரங்களுக்கு ஸ்டான்ட்பை கொடுக்கும். இந்த பேட்டரியுடன் 8.75 எம்எம் தடிமன் மற்றும் 210 கிராம் எடை கொண்ட மாடலாக லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கிடைக்கிறது.

ஆர்யா ப்ளூ (Arya Blue) மற்றும் சோனார் கோல்டு (Sonar Gold) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போனின் மார்கெட் விலை ரூ.12,999 ஆக இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுகையில் ரூ.11,999 விலைக்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் லாவா தளங்களில் ஆர்டர் செய்யலாம். ஜூலை 31ஆம் தேதி வரை மட்டுமே அறிமுக சலுகை கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Lava Virat V1 5G With 6000mAh Battery Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X