பிளிப்கார்ட்டில் செம ஆஃபர்.. லாவா 5ஜி போனை வாங்க சரியான நேரம்.. 6000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட்டில் லாவா விராட் வி1 5ஜி (Lava Virat V1 5G) மாடல் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
பிளிப்கார்ட்டில் தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட லாவா விராட் வி1 5ஜி போனுக்கு 19 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே இந்த மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

லாவா விராட் வி1 5ஜி அம்சங்கள் (Lava Virat V1 5G Specifications): லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் 6.75 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்கள், 16.7 மில்லியன் கலர் டெப்த், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.
தரமான யுனிசோக் டி8200 ஆக்டா கோர் (UNISOC T8200 Octa Core) சிப்செட் உடன் லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
அதேபோல் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். ஆர்யா ப்ளூ (Arya Blue) மற்றும் சோனார் கோல்டு (Sonar Gold) ஆகிய கலர்களில் இந்த லாவா ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.
குறிப்பாக 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி உடன் லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த புதிய லாவா ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய லாவா ஸ்மார்ட்போனில் உள்ளது.
IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லாவா நிறுவனம்.
லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் 13எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
போர்ட்ராய்டு (Portrait), ஸ்லோவ் மோஷன் (Slow Motion), டைம் லேப்ஸ் (Timelapse), ரீபோகஸ் (Refocus), ஆடியோ நோட் (Audio Note), மோஷன் போட்டோ (Motion Photo), பியூட்டி (Beauty) எச்டிஆர் (HDR) போன்ற பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, ஆகவே இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10W சார்ஜிங் வசதியும் உள்ளது.


Click it and Unblock the Notifications