தூக்குங்கடா அந்த தங்கத்த.. வெறும் ரூ.14499 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 10W சார்ஜிங்.. 128GB மெமரி.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வரும் லாவா மொபைல்ஸ் (Lava Mobile) நிறுவனமானது, லாவா விராட் வி1 5ஜி (Lava Virat V1 5G) ஸ்மார்ட்போனை ரூ.12,000 பட்ஜெட்டில் களமிறக்கியது. இது மிகப்பெரும் வரவேற்பை பெற்றதால், 128 ஜிபி மெமரி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த ஜூலை மாதமே இந்த லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகிவிட்டது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் மட்டுமே கிடைத்தது. இருப்பினும், மற்ற பீச்சர்களில் பட்டையை கிளப்பியதால், வரவேற்பு எகிறியது. இதனாலேயே இப்போது 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் களமிறக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வேரியண்ட்டின் விலை ரூ.14,499 ஆக மட்டுமே இருக்கிறது. இந்த விலையுடன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கும் கிடைக்கிறது. பீச்சர்களில் எந்த மாற்றமும் இல்லை. ஸ்டோரேஜ் மட்டுமே அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
லாவா விராட் வி1 5ஜி அம்சங்கள் (Lava Virat V1 5G Specifications): ஆக்டா கோர் யுனிசோக் டி8200 (Octa Core UNISOC T8200) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போனில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது.
மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2.5D கிளாஸ் கிடைக்கிறது. மேலும், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கொண்ட டிஸ்பிளேவாக இது இருக்கிறது. லாவா ஸ்மார்ட்போன்களில் வழக்கமாக கிடைக்கும் போர்ட்ராய்டு (Portrait), ஸ்லோவ் மோஷன் (Slow Motion), டைம் லேப்ஸ் (Timelapse), ரீபோகஸ் (Refocus) உள்ளிட்ட பீச்சர்களுடன் கேமரா செட்டப் உள்ளது.
13 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி செல்பீ கேமராவை இந்த . இதில் லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. எச்டி வீடியோ ரெக்கார்டிங் (HD Video Recording) கிடைக்கிறது. மேலும்,
மோஷன் போட்டோ (Motion Photo), பியூட்டி (Beauty), பனோரமா (Panorama), எச்டிஆர் (HDR) போன்ற மோட்கள் கிடைக்கிறது. நைட் (Night) மற்றும் ஏஐ மோட் (AI Mode) உள்ளிட்ட பீச்சர்கள் உள்ளன.
டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) கிடைக்கிறது. 8.75 எம்எம் தடிமன் கொண்ட பாடியில் 6000mAh பேட்டரியை இந்த லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இந்த பேட்டரிக்கு 10W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் கிடைக்கிறது. மொத்தமாக 210 கிராம் எடை கொண்டுள்ளது.
IP64 ரேட்டிங் கொண்ட மாடலாக இந்த லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்யா ப்ளூ (Arya Blue) மற்றும் சோனார் கோல்டு (Sonar Gold) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications