அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. கம்மி விலை.. 6000எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது Lava 5ஜி போன்.. எந்த மாடல்?
லாவா நிறுவனம் தனது லாவா விராட் வி1 5ஜி (Lava Virat V1 5G) ஸ்மார்ட்போனை வரும் ஜூலை 24-ம் தேதி மதியம் 12 மணி அளவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
லாவா விராட் வி1 5ஜி அம்சங்கள் (Lava Virat V1 5G Specifications): 6.75-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த புதிய லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த ஆக்டா கோர் யுனிசாக் டி8200 (Octa Core UNISOC T8200) சிப்செட் உடன் லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனை அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
ஆண்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லாவா நிறுவனம்.
IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியும் இந்த புதிய
போனில் உள்ளதாக கூறப்படுகிறது.
13எம்பி டூயல் ரியர் கேமரா உடன் லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
6000எம்ஏஎச் பேட்டரி உடன் லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் ஆர்யா ப்ளூ (Arya Blue) மற்றும் சோனார் கோல்டு (Sonar Gold) நிறங்களில் இந்த போன் வெளிவரும். குறிப்பாக இந்த போன் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல்கள் கசிந்துள்ளது.


Click it and Unblock the Notifications