வெச்சி செஞ்சிட்டாப்ல.. ரூ.11999 போதும்.. 5000mAh பேட்டரி.. 10W சார்ஜிங்.. புது Virat ஸ்மார்ட்போன். எந்த மாடல்?
லாவா மொபைல்ஸ் நிறுவனத்தின் புதிய மற்றும் முதலாவது சீரிஸ் மாடல்களான லாவா விராட் வி1 5ஜி (Lava Virat V1 5G) மற்றும் லாவா விராட் வி1 4ஜி (Lava Virat V1 4G) ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்திய மார்கெட்டில் தொடங்கிவிட்டது. ஆரம்பமே அறிமுக சலுகையில் கிடைப்பதால், விற்பனையிலும் பட்டையை கிளப்புகிறது. இந்த விராட் மாடல்களின் விலை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999 ஆக இருக்கிறது. அறிமுக சலுகையில் ரூ.11,999 விலைக்கு வாங்கி கொள்ள கிடைக்கிறது. ஆர்யா ப்ளூ (Arya Blue) மற்றும் சோனார் கோல்டு (Sonar Gold) கலர்களில் கிடைக்கிறது. லாவா விராட் வி1 4ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆக இருக்கிறது.

அறிமுக சலுகையில் ரூ.8,999 விலைக்கு கிடைக்கிறது. நீலகிரி ப்ளூ (Nilgiri Blue), ஹிமாலயன் சில்வர் (Himalayan Silver) ஆகிய 2 கலர்களில் வாங்கலாம். பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஆகவே, தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி மற்றும் ஈஎம்ஐ சலுகைகளையும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.
லாவா விராட் வி1 5ஜி அம்சங்கள் (Lava Virat V1 5G Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் (UNISOC T8200 Octa Core) சிப்செட் கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்து உள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது.
13 எம்பி மெயின் கேமராவை இந்த லாவா விராட் வி1 5ஜி கொடுக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 5 எம்பி செகண்டரி செல்பீ உள்ளது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி உள்ளது. 8.75 எம்எம் தடிமன் மற்றும் 210 கிராம் உள்ளது. IP64 ரேட்டிங் மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) உள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளது.
லாவா விராட் வி1 4ஜி அம்சங்கள் (Lava Virat V1 4G Specifications): 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே உள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது. இந்த லாவா விராட் வி1 4ஜி ஸ்மார்ட்போனிலும் 5000mAh பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் கிடைக்கிறது. 8.5 எம்எம் தடிமன் கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் (Android 15 Go Edition) ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் 9863ஏ (Octa Core UNISOC 9863a) சிப்செட் கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்ட மாடலாக இந்த லாவா விராட் வி1 4ஜி இருக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications