Home
Mobile

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்.. நம்பமுடியாத கம்மி விலையில் லாவா 5ஜி போன்.. எந்த மாடல்?

வரும் அக்டோபர் 9-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart's Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். அதேபோல் லாவா நிறுவனத்தின் 5ஜி போன் ஒன்று கம்மி விலையில் கிடைக்க உள்ளது.

அதாவது லாவா நிறுவனத்தின் லாவா விராட் வி1 5ஜி (Lava Virat V1 5G) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ரூ.13,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட்டில் நடைபெற உள்ள சிறப்பு விற்பனையில் இந்த லாவா 5ஜி போன் ரூ.11,999 விலையில் வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பமுடியாத கம்மி விலையில் லாவா 5ஜி போன்..  எந்த மாடல்?

லாவா விராட் வி1 5ஜி அம்சங்கள் (Lava Virat V1 5G Specifications): யுனிசோக் டி8200 ஆக்டா கோர் (UNISOC T8200 Octa Core) சிப்செட் உடன் லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

6.75 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளேவுடன் இந்த லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்கள், 16.7 மில்லியன் கலர் டெப்த், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் மூலம் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். ஆர்யா ப்ளூ (Arya Blue) மற்றும் சோனார் கோல்டு (Sonar Gold) ஆகிய கலர்களில் இந்த லாவா ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

அதுவும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி உடன் லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த புதிய லாவா ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய லாவா ஸ்மார்ட்போனில் உள்ளது.

IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லாவா நிறுவனம்.

நம்பமுடியாத கம்மி விலையில் லாவா 5ஜி போன்..  எந்த மாடல்?

13எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா உடன் லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

போர்ட்ராய்டு (Portrait), ஸ்லோவ் மோஷன் (Slow Motion), டைம் லேப்ஸ் (Timelapse), ரீபோகஸ் (Refocus), ஆடியோ நோட் (Audio Note), மோஷன் போட்டோ (Motion Photo), பியூட்டி (Beauty) எச்டிஆர் (HDR) போன்ற பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6000எம்ஏஎச் பேட்டரி உடன் லாவா விராட் வி1 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, ஆகவே இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10W சார்ஜிங் வசதியும் உள்ளது.

Best Mobiles in India

English summary
LAVA Virat V1 5G Available at Rs 11999 During Flipkart Big Billion Days Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X