Home
Mobile

யாரு சாமி அவன்.. வெறும் ரூ.8,121 போதும்.. 5000mAh பேட்டரி.. 10W சார்ஜிங்.. 13MP கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart's Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் லாவா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இதில் 4ஜி ஸ்மார்ட்போனை மட்ட ரேட்டில் வாங்க விரும்பினால், லாவா விராட் வி1 4ஜி (Lava Virat V1 4G) ஸ்மார்ட்போன் பக்கா தேர்வாக இருக்கும்.

இப்போது, பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.8,999ஆக இருக்கிறது. ஆனால், மார்கெட் விலை ரூ.9,999ஆக இருக்கிறது. இதுபோக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.878 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.8,121 விலைக்கு வாங்கி கொள்ளலாம். 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

யாரு சாமி அவன்.. வெறும் ரூ.8,121 போதும்.. 5000mAh பேட்டரி.. மாடல்?

லாவா விராட் வி1 4ஜி அம்சங்கள் (Lava Virat V1 4G Specifications): இந்த ஸ்மார்ட்போனில் 6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதில் எச்டி பிளஸ் (HD+) ரெசொல்யூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 20:9 அஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 2.5D கிளாஸ் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கொண்டுள்ளது.

வாட்டர் டிராப் நாட்ச் டிசைனில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் யுனிசோக் 9863A (Octa Core UNISOC 9863A) சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. பட்ஜெட் விலைக்கு ஏற்ற வகையில் இந்த சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் (Android 15 Go Edition) ஓஎஸ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இந்த லாவா விராட் வி1 ஸ்மார்ட்போனில் 13 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எச்டி வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும். 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும், மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் 256 ஜிபி வரை மெமரியை விரிவாக்கம் செய்ய முடியும். இதனுடன் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது.

டூயல் நானோ சிம் ஸ்லாட் (Dual Nano SIM Slot) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் (microSD Card Slot) வசதிகள் இதில் உள்ளன. பேட்டரியை பொறுத்தவரை, 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8.5 மிமீ தடிமன் கொண்டுள்ளது. மேலும், டைப்-சி போர்ட் (Type-C Port), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் ஓடிஜி (OTG) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அம்சங்களுக்காக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, ப்ளூடூத் வி4.2 (Bluetooth V4.2) மற்றும் வை-ஃபை 802.11 b (Wi-Fi 802.11 b) வசதிகள் உள்ளன. கேமராவில் போர்ட்ரெய்ட், ஸ்லோ மோஷன், டைம்லேப்ஸ், ரீஃபோகஸ், ஆடியோ நோட், மோஷன் போட்டோ, பியூட்டி மற்றும் எச்டிஆர் உள்ளிட்ட பல்வேறு பீச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், லாவா விராட் வி1 ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த 5ஜி மாடல் கூடுதல் விலையில் கிடைக்கிறது. எனவே, பட்ஜெட் விலையில் அடிப்படை ஸ்மார்ட்போன் அம்சங்கள், பெரிய டிஸ்பிளே மற்றும் அதிக பேட்டரி திறனை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இந்த லாவா விராட் வி1 மாடல் ஒரு தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Lava Virat V1 4G With 4GB RAM Available At Rs 8999 in Flipkart Big Billion Days Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X