Home
Mobile

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 6000mAh பேட்டரி.. 6GB ரேம்.. எந்த போன்?

சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களை தூக்கி சாப்பிடும்படியான 3டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், செகண்டரி அமோலெட் டிஸ்பிளேவுடன் பட்ஜெட் விலையில் இந்தியாவின் லாவா விராட் கர்வ் (Lava Virat Curve) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. சோனி கேமரா, 45W சார்ஜிங் போன்ற மற்ற பீச்சர்களிலும் மிரளவிட்டு இருக்கிறது.

லாவா மொபைல்ஸ் நிறுவனம், இந்தியாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இருப்பினும், சீன மாடல்களுக்கு நிகரான டிசைனில் ஸ்மார்ட்போன்களை கொடுத்து வருகிறது. இதில் விராட் சீரிஸ் மாடல்கள் பீச்சர்களிலும் பிரீமியம் காட்டுகின்றன. இப்போது, லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போன் அதில் தனியிடம் பிடித்துள்ளது.

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா!

லாவா விராட் கர்வ் அம்சங்கள் (Lava Virat Curve Specifications): 6.67 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1100 எச்பிஎம் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஏஎல்-எஸ்ஐ டிடி ஸ்டார் 2 கவப் கிளாஸ் (Al-Si DT Star 2 Cover Glass) புரொடெக்சன் கொண்ட டிஸ்பிளேவாக இது இருக்கிறது. 3டி கர்வ்ட் டிசைனில் கிடைப்பதால், பிரீமியம் லுக் கொடுக்கப்பட்டு உள்ளது. பேக் கேமராவுக்கு கீழே செகண்டரி அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. மேட்ரிக்ஸ் டிஸ்பிளே போன்ற அவுட்புட்டை கொடுக்கிறது.

கால், சார்ஜிங் மட்டுமல்லாமல், கஸ்டம் டெக்ஸ்ட், டைம் மற்றும் எமோஜி உள்ளிட்ட நோட்டிபிகேஷன்களை அனிமேஷன்களாக இந்த டிஸ்பிளேவில் பார்த்து கொள்ளலாம். ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7100 6nm) சிப்செட் மற்றும் மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது.

ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலாக இந்த லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. 6 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது. மேலும், 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. பஞ்ச்-ஹோல் டிசைனில் 13 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. லாவா யுஐ (Lava UI) மற்றும் வாயு ஏஐ (Vayu AI) உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்து இருக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது.

டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளன. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) மற்றும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கொண்ட மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொண்ட மாடலாகவும் இந்த லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது.

45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.55 எம்எம் தடிமன் மற்றும் 184 கிராம் எடை கொடுத்துள்ளது. வீகன் லெதர் பேக் பேனலுடன் கிடைக்க இருக்கிறது. இந்த டிசைனில் ஹெரிடேஜ் இண்டிகோ (Heritage Indigo) மற்றும் மக்ரானா ஐவரி (Makrana Ivory) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.

இந்த லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,999ஆக இருக்கிறது. இருப்பினும், பேங்க் தள்ளுபடி போக அறிமுக சலுகையில் ரூ.19,999 விலைக்கு கிடைக்க இருக்கிறது. வருகிற செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து கொள்ளலாம். பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Lava Virat Curve With 6GB RAM Launched in India Sale From September 28 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X