Home
Mobile

கொளுத்துது விற்பனை.. 20 சதவீத ஆஃபரில் 3D டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்களை போட்டிப் போட்டு கொண்டு ஆர்டர் செய்ய வைக்கும்படியான தள்ளுபடி விலைக்கு லாவா விராட் கர்வ் (Lava Virat Curve) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 45W சார்ஜிங், 6000mAh பேட்டரி உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்து இருக்கிறது. இந்த லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் வாவ் டீலில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 20 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.23,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்வு செய்யப்பட்ட பேங்க் கார்டுகள் வழியாக ஆர்டர் செய்தால், ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.21,999 விலைக்கு வாங்கலாம். 9 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது.

கொளுத்துது விற்பனை.. 20 சதவீத ஆஃபரில் 3D டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி!

வீகன் லெதர் பேக் பேனல் டிசைனில் கிடைக்கிறது. ஹெரிடேஜ் இண்டிகோ (Heritage Indigo) மற்றும் மக்ரானா ஐவரி (Makrana Ivory) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம். 3டி கர்வ்ட் டிஸ்பிளே இருந்தாலும், 8.55 எம்எம் தடிமன் கொடுத்துள்ளது. இருப்பினும், ஓரளவுக்கு ஸ்லிம் லுக் கொடுக்கிறது. பேட்டரியுடன் சேர்த்தே 184 கிராம் எடை மட்டுமே வருகிறது.

லாவா விராட் கர்வ் அம்சங்கள் (Lava Virat Curve Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7100 6nm) சிப்செட்டுடன் இந்த லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன.

2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்டுடன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

கொளுத்துது விற்பனை.. 20 சதவீத ஆஃபரில் 3D டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி!

மேலும், 1100 எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஏஎல்-எஸ்ஐ டிடி ஸ்டார் 2 கவப் கிளாஸ் (Al-Si DT Star 2 Cover Glass) புரொடெக்சன் கிடைக்கிறது. இதுவொரு டுயல் டிஸ்பிளே மாடலாக இருக்கிறது. ஆகவே, ரியரில் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே போல செகண்டரி அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் நோட்டிபிகேஷன்களை பார்த்து கொள்ளலாம்.

கஸ்டம் நோட்டிபிகேஷன்கள் கிடைக்கும். மேலும், கால், எஸ்எம்எஸ், ஆப் நோட்டிபிகேஷன், சார்ஜிங் இன்டிகேஷன் உள்ளிட்ட நோட்டிபிகேஷன்களையும் பார்க்க முடியும். 6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டு உள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

13 எம்பி செல்பீ கேமராவை இந்த லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. லாவா யுஐ (Lava UI) கொடுக்கப்பட்டு உள்ளது. அதனுடன் வாயு ஏஐ (Vayu AI) இன்டிகிரேஷன் செய்யப்பட்டு இருக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.

Best Mobiles in India

English summary
Lava Virat Curve With 6GB RAM Available At Rs 23999 Instead of 29999 in Flipkart Wow Deal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X