யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 6000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்களை தட்டித் தூக்கும்படி லாவா விராட் கர்வ் (LAVA Virat Curve) ஸ்மார்ட்போன் களமிறங்க இருக்கிறது. இப்போது, வெளியீட்டு தேதி மட்டுமல்லாமல், டிஸ்பிளே, கேமரா, சிப்செட், பேட்டரி மற்றும் ஓஎஸ் உள்ளிட்ட ஒட்டுமொத்த பீச்சர்களும் உறுதியாகி இருக்கின்றன. இந்த லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் வருகிற செப்டம்பர் 21ஆம் தேதியன்று லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. ஆகவே, ஒட்டுமொத்த பீச்சர்களும் பிளிப்கார்ட் தளத்தின் மைக்ரோசைட் வழியாக உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. வீகன் லெதர் பேனல் டிசைனும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

லாவா விராட் கர்வ் அம்சங்கள் (LAVA Virat Curve Specifications): 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளேவை கொடுத்து இருக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 1.07 பில்லியன் கலர் டெப்த் மற்றும் 100 சதவீத டிசிஐ பி3 கலர் காமட் கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட மாடலாக இந்த லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. 2 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்பட இருக்கின்றன. வாயு ஏஐ (Vayu AI) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 (Octa Core MediaTek Dimensity 7100) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்ட மாடலாக இந்த லாவா விராட் கர்வ் இருக்கிறது. ஆகவே, 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டை ஆர்டர் செய்து கொள்ளலாம். யுனிக் ரியர் மினி டிஸ்பிளே (Unique Rear Mini Display) கொடுத்துள்ளது. மேட்ரிக்ஸ் டிஸ்பிளேவை போல இது வேலை செய்கிறது. ஆகவே, பேட்டரி, டைம், மேசேஜ் உள்ளிட்ட நேட்டிபிகேஷன்களை பார்த்து கொள்ளலாம்.
சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கேமராவுக்கு 10X டிஜிட்டல் ஜூமிங், 720p ஸ்லோவ் மோஷன் வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது. 2K ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்த லாவா விராட் கர்வ் இருக்கிறது.
பிரீமியம் டியூரபிலிட்டி கொண்ட மாடலாக இந்த லாவா விராட் கர்வ் இருக்கிறது. ஏனென்றால், எம்ஐஎல்-எஸ்டிடி0810எச் (MIL-STD 810H) மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன் மட்டுமல்லாமல், IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொடுக்கப்பட்டு இருக்கிறது. டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதேபோல டூயல் மைக்குகள் உள்ளன.
இந்த லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போனில் ஹெரிடேஜ் இண்டிகோ (Heritage Indico), மக்ரனா ஐவரி (Makrana Ivory) ஆகிய கலர்கள் கிடைக்க இருக்கின்றன. மெட்டாலிக் மிடில் ஃபிரேம் லுக் மற்றும் வீகன் லெதர் பேனல் கிடைப்பதால், பிரீமியம் லுக் கொடுக்கிறது. 6 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் கிடைக்க இருப்பதால், பட்ஜெட்டில் இந்த லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
