ஆர்டர் மிரளும்.. ரூ.20000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 45W சார்ஜிங்.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்கள் மட்டுமல்லாமல், 3டி கர்வ்ட் டிஸ்பிளேவை விரும்பும் ஸ்மார்ட்போன் பிரியர்களும் காத்திருந்த நேரம் வந்துவிட்டது. லாவா விராட் கர்வ் (Lava Virat Curve) ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று தொடங்குகிறது. இந்த 3டி கர்வ்ட் டிஸ்பிளே ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. கிரெடிட் கார்டு சலுகைகள் போக ரூ.19,999 அறிமுக விலைக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் இரவு 7 மணி முதல் ஆர்டர் செய்து கொள்ளலாம். இண்டிகோ (Heritage Indigo) மற்றும் மக்ரானா ஐவரி (Makrana Ivory) ஆகிய கலர்களில் லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது.

லாவா விராட் கர்வ் அம்சங்கள் (Lava Virat Curve Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7100 6nm) சிப்செட்டை கொடுத்து இருக்கிறது. மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட மாடலாக இந்த லாவா விராட் கர்வ் இருக்கிறது. 2 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் உள்ளது.
இதுபோக 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 1100 எச்பிஎம் பிரைட்னஸ் மற்றும் 394 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது.
ஏஎல்-எஸ்ஐ டிடி ஸ்டார் 2 கவப் கிளாஸ் (Al-Si DT Star 2 Cover Glass) பாதுகாப்பு கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. வீடியோ கால்கள், செல்பீகளுக்காக 13 எம்பி கேமராவை இந்த லாவா கர்வ் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.
இந்த கேமராவுக்கு நைட் மோட் (Night Mode), ஏஐ மோட் (AI Mode), எச்டிஆர் மோட் (HDR Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், 50 எம்பி ப்ரோ மோட், ப்ரோ வீடியோ, டூயல் வியூ வீடியோ, மோஷன் போட்டோ உள்ளிட்ட பீச்சர்களையும் இந்த கேமரா கொடுத்துள்ளது. லாவா யுஐ (Lava UI) மற்றும் வாயு ஏஐ (Vayu AI) கிடைக்கிறது.
IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) கொடுக்கப்பட்டு இருக்கிறது. எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கொண்ட ஸ்மார்ட்போனாக இருக்கிறது.
இந்த லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. 3டி கர்வ்ட் மாடலாக இருந்தாலும் ஸ்லிம் மாடலாக இருக்கவில்லை. 8.55 எம்எம் தடிமன் வருகிறது. மொத்தமாக 184 கிராம் எடை கொடுத்துள்ளது. செகண்டரி டிஸ்பிளே கொண்ட மாடலாக இருப்பதால், விற்பனையில் வரவேற்பு பெறலாம்.


Click it and Unblock the Notifications
