தூக்குங்கடா அந்த தங்கத்த.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 12GB ரேம்.. 2 ஜென் OS அப்டேட்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களையும் தூக்கி சாப்பிடும்படியான டிசைனில் இந்தியாவில் லாவா மொபைல்ஸ் (LAVA Mobiles) நிறுவனமானது, லாவா விராட் கர்வ் (LAVA Virat Curve) ஸ்மார்ட்போனை களமிறக்க இருக்கிறது. இந்த லாவா ஸ்மார்ட்போனின் ஆண்ட்ராய்டு ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் பாலிசி உறுதியாகி இருக்கிறது.
லாவா நிறுவனத்தின் விராட் சீரிஸ் மாடல்களில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே கொண்ட மாடலாக இந்த லாவா விராட் கர்வ் வெளியாக இருக்கிறது. வருகிற செப்டம்பர் 21ஆம் தேதியன்று இந்தியாவில் வெளியாக இருக்கிறது. வழக்கமாக டிசைன் மற்றும் சிப்செட் உள்ளிட்ட சில பீச்சர்கள் மட்டுமே உறுதி செய்யப்படும். ஆனால், இந்த கர்வ் மாடலின் முழு பீச்சர்களும் உறுதியாகி இருக்கின்றன.

பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் கிடைக்க இருப்பதால், அந்த தளத்தில் மைக்ரோசைட்டில் முழு பீச்சர்களும் உறுதியாகி இருக்கின்றன. முன்னதாக டிசைன், கலர், கேமரா, சிப்செட், பேட்டரி மற்றும் ரேம் உள்ளிட்ட விவரங்கள் உறுதியாகின. இப்போது, ஆண்ட்ராய்டு ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் பாலிசி உறுதி செய்யப்பட்டு, வெளியீட்டுக்கு முன்பே ஒட்டுமொத்த பீச்சர்களும் தெரியவந்துள்ளன.
லாவா விராட் கர்வ் அம்சங்கள் (LAVA Virat Curve Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட உள்ளது. 2 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை இந்த லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 (Octa Core MediaTek Dimensity 7100) சிப்செட் கிடைக்க இருக்கிறது.
ஆகவே, பட்ஜெட்டில் பக்கா பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், 100 சதவீத டிசிஐ பி3 கலர் காமட் கொண்டுள்ளது. இதுபோக ரியர் கேமராவுக்கு கீழே யுனிக் ரியர் மினி டிஸ்பிளே (Unique Rear Mini Display) கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே போல அனிமேஷன்களை கொண்ட நோட்டிபிகேஷன்களை பார்த்து கொள்ள முடியும். கிட்டத்தட்ட டூயல் டிஸ்பிளே கொண்ட மாடலாகவும் இந்த லாவா விராட் கர்வ் இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா கொண்டுள்ளது. இந்த கேமராவுக்கு சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 10X டிஜிட்டல் ஜூமிங் செய்து கொள்ளலாம். 2K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. ஸ்லோவ் மோஷன் வீடியோவையும் 720p ரெசொலூஷனில் ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) கிடைக்கின்றன.
IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொண்ட மாடலாக இந்த லாவா விராட் கர்வ் கிடைக்க இருக்கிறது. மேலும், எம்ஐஎல்-எஸ்டிடி0810எச் (MIL-STD 810H) மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, டிராப் ரெசிஸ்டன்ஸ், ஷாக் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 6000mAh பேட்டரி கிடைக்கிறது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கிறது. 6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது. 128 ஜிபி மெமரி கொடுத்துள்ளது. ஹெரிடேஜ் இண்டிகோ (Heritage Indico), மக்ரனா ஐவரி (Makrana Ivory) ஆகிய கலர்களில் வெளியாக இருக்கிறது. விலை விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும், பட்ஜெட்டில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications
