நாளை விற்பனைக்கு வரும் புது லாவா 5ஜி போன்.. 2 டிஸ்பிளே.. சோனி கேமரா.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?
லாவா விராட் கர்வ்(Lava Virat Curve) ஸ்மார்ட்போன் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன் நாளை (செப்டம்பர் 28) முதல் முறையாக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
லாவா விராட் கர்வ் அம்சங்கள் (Lava Virat Curve Specifications): 6.67 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2400 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1100 எச்பிஎம் பிரைட்னஸ், ஏஎல்-எஸ்ஐ டிடி ஸ்டார் 2 கவப் கிளாஸ் (Al-Si DT Star 2 Cover Glass) புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7100 6nm) சிப்செட்உடன் லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய போனில் மாலி ஜி610 ஜிபியு (Mali G610 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனால் இந்த போனுக்கு 2 ஓஎஸ் அப்டேட் மற்றும் மூன்று வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
அதேபோல் இந்த போனின் ரியர் கேமரா பகுதிக்கு கீழே செகண்டரி அமோலெட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கால், சார்ஜிங், கஸ்டம் டெக்ஸ்ட், டைம், எமோஜி உள்ளிட்ட நோட்டிபிகேஷன்களை அனிமேஷன்களாக பார்த்துக் கொள்ளலாம். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இது மேட்ரிக்ஸ் டிஸ்பிளே போன்ற அவுட்புட்டை கொடுக்கிறது.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்752 மெயின் ரியர் கேமரா உடன் லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய போனில் உள்ளது.
IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) மற்றும் எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் உடன் லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers)போன்ற வசதிகள் இந்த புதிய போனில் உள்ளன.

6000எம்ஏஎச் பேட்டரி உடன் லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6இ, புளூடூத் 5.4, பெய்டோ, ஜிபிஎஸ், குளோனாஸ், கலிலியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட லாவா விராட் கர்வ் போனின் விலை ரூ.23,999-ஆக உள்ளது. ஆனால் அறிமுகச் சலுகையின் ஒரு பகுதியாக, இந்த போன் ரூ. 4000 வங்கிச் சலுகையுடன் ரூ. 19,999 விலையில் வாங்க கிடைக்கும். ஹெரிடேஜ் இண்டிகோ (Heritage Indigo) மற்றும் மக்ரானா ஐவரி (Makrana Ivory) ஆகிய கலர்களில் இந்த போன் விற்பனைக்கு வரும்


Click it and Unblock the Notifications
