Home
Mobile

அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. மினி டிஸ்பிளே.. சோனி கேமரா.. செப்.21-ல் வரும் புது லாவா 5ஜி போன்..

லாவா நிறுவனம் வரும் செப்டம்பர் 21-ம் தேதி லாவா விராட் கர்வ் (LAVA Virat Curve) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பிளப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். இந்நிலையில் இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு முக்கிய அம்சங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

லாவா விராட் கர்வ் அம்சங்கள் (Lava Virat Curve Specifications): 6.67-இன்ச் கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே உடன் லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் 1.0 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ள.

அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. செப்.21-ல் வரும் புது லாவா போன்!

அதேபோல் இந்த போனின் பின்புறம் ஒரு சிறிய டிஸ்பிளேவும் உள்ளது. அதாவது யுனிக் ரியர் மினி டிஸ்பிளே (Unique Rear Mini Display) உடன் இந்த புதிய லாவா போன் வெளியாகும். குறிப்பாக இந்த சிறிய டிஸ்பிளே மூலம் பேட்டரி டைம், மியூசிக் கன்ட்ரோல் (Music Control), நேட்டிபிகேஷன், மெசேஜ் போன்ற தகவல்களைப் பார்க்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லாவா நிறுவனம்.

சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7100 (Octa Core MediaTek Dimensity 7100) சிப்செட் உடன் லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட சிபியு மற்றும் ஜிபியு வேகத்தை வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த புதிய லாவா போன் அறிமுகமாகும்.

50 எம்பி மெயின் சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) ரியர் கேமராவுடன் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்படும். இந்த போனின் செல்பி கேமரா விவரங்கள் வெளியிடவில்லை. ஆனாலும் இந்த போன் 13எம்பி அல்லது 16எம்பி செல்பி கேமராவுடன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் லாவா விராட் கர்வ் போன் வெளியாகும். அதேபோல் இந்த போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்களும் உள்ளன. டூயல் மைக்குகள் மற்றும் டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) உடன் இந்த லாவா போன் அறிமுகமாகும். அதுவும் சிறந்த ஆடியோ அனுபவம் இதில் கிடைக்கும்.

அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. செப்.21-ல் வரும் புது லாவா போன்!

6000எம்ஏஎச் பேட்டரி உடன் லாவா விராட் கர்வ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. ஹெரிடேஜ் இண்டிகோ (Heritage Indico), மக்ரனா ஐவரி (Makrana Ivory) ஆகிய கலர்களில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த லாவா 5ஜி போன் ரூ.20,000 அல்லது ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Lava Virat Curve With 3D curved AMOLED display Specifications Price Leaked Ahead of Launch on sept 21
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X