அலைகள் எப்போதுமே ஓய்வதில்லை: மீண்டும் ஒரு அட்டகாச போனை இறக்கிவிடும் இந்திய நிறுவனம்.!

|

அலைகள் ஓய்வதில்லை என்பது போல் ஸ்மார்ட்போன்களை நிறுத்தம் இல்லாமல் அறிமுகம் செய்துகொண்டே வருகிறது லாவா நிறுவனம். அதாவது அலைகள் வருவது போன்று மீண்டும், மீண்டும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவருகிறது இந்நிறுவனம். இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டான லாவா (Lava) சமீபத்தில் 5ஜி, 4ஜி எனப் பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.

LAVA X3 அறிமுகம்

LAVA X3 அறிமுகம்

குறிப்பாக இந்தியாவில் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் போன்களுக்கு இப்போது நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும் இந்நிலையில் லாவா நிறுவனம் இந்தியாவில் LAVA X3 எனும் ஸ்மார்ட்போனை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

பொசுக்குன்னு சீன கம்பெனியுடன் கூட்டு சேர்ந்த ஜியோ.. 16 போன்களுக்கு மட்டும் ஸ்பெஷல் 5G.. இதோ ஃபுல் லிஸ்ட்!பொசுக்குன்னு சீன கம்பெனியுடன் கூட்டு சேர்ந்த ஜியோ.. 16 போன்களுக்கு மட்டும் ஸ்பெஷல் 5G.. இதோ ஃபுல் லிஸ்ட்!

டீசர் வெளிவந்துள்ளது

டீசர் வெளிவந்துள்ளது

குறிப்பாக லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் அறிமுகம் செய்யப்படும் என டீசர் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின்
சில அம்சங்கள் கூட ஆன்லைனில் கசிந்துள்ளது. இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

BSNL பயனர்கள் ஷாக்! தலைகீழா நின்றாலும் இனி இந்த ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்காது.. கடைசி வாய்ப்புBSNL பயனர்கள் ஷாக்! தலைகீழா நின்றாலும் இனி இந்த ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்காது.. கடைசி வாய்ப்பு

 பெரிய டிஸ்பிளே

பெரிய டிஸ்பிளே

லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த லாவா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Apple Watch-க்கு பதிலா இனி எல்லோரும் இந்த Xiaomi Watch S2 தான் வாங்கப்போறாங்க.! ஏன் தெரியுமா?Apple Watch-க்கு பதிலா இனி எல்லோரும் இந்த Xiaomi Watch S2 தான் வாங்கப்போறாங்க.! ஏன் தெரியுமா?

இது 4ஜி-ஆ அல்லது 5ஜி-ஆ

இது 4ஜி-ஆ அல்லது 5ஜி-ஆ

லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் 4ஜி ஆதரவு உள்ளதா? அல்லது 5ஜி ஆதரவு உள்ளதா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் இந்நிறுவனம் தற்போது 5ஜி போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. எனவே இந்த போன் 5ஜி ஆதரவுடன் வெளிவர வாய்ப்பு உள்ளது.

என்ன இப்படி ஆகிடுச்சு? Password-களை ஒழித்துக்கட்ட ஆரம்பித்த Google.. இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?என்ன இப்படி ஆகிடுச்சு? Password-களை ஒழித்துக்கட்ட ஆரம்பித்த Google.. இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

 டூயல் ரியர் கேமரா

டூயல் ரியர் கேமரா

லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா ஆதரவு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேற்று பிரபஞ்சத்திலிருந்து பூமியை தாக்கிய மர்ம சக்தி.! 1000 மடங்கு பெருசு.! அதிர்ந்து போன விஞ்ஞானிகள்.!வேற்று பிரபஞ்சத்திலிருந்து பூமியை தாக்கிய மர்ம சக்தி.! 1000 மடங்கு பெருசு.! அதிர்ந்து போன விஞ்ஞானிகள்.!

மீடியாடெக் ஹீலியோ சிப்செட்

மீடியாடெக் ஹீலியோ சிப்செட்

2ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் ஆதரவுடன் இந்த லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் அறிமுகமாகும் இந்த லாவா எக்ஸ்3 போன். பின்பு பாட்டம்-ஃபைரிங் ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுடன் அறிமுகமாகும் இந்த லாவா எக்ஸ்3 மாடல்.

சத்தமின்றி சம்பவம் செய்த ISRO: ஒலியை விட பல மடங்கு வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் சோதனை! வெற்றி..சத்தமின்றி சம்பவம் செய்த ISRO: ஒலியை விட பல மடங்கு வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் சோதனை! வெற்றி..

ரூ.10,000-க்குள் அறிமுகமாகும்..

ரூ.10,000-க்குள் அறிமுகமாகும்..

குறிப்பாக இந்த லாவா எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் அம்சங்களை வைத்துப் பார்க்கையில், ரூ.10,000-க்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

photo courtesy: Pricebaba

Best Mobiles in India

English summary
Lava to launch new Lava X3 smartphone powered by MediaTek chipset under Rs 10,000: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X