Home
Mobile

சைனீஸ் போன்களின் சேப்டர் க்ளோஸ்.. இந்திய பிராண்ட்டின் இன்னொரு புது போன்.. Lava Agni 4-ஐ தொடர்ந்து Pro 5G!

லாவா (Lava) நிறுவனத்தின் ஷார்க் சீரிஸின் கீழ் இன்னொரு புதிய ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிறுவனம் - கடந்த மாதம் சூப்பர் பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் லாவா ஷார்க் 2 4ஜி (Lava Shark 2 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருந்தது.

இப்போது இந்நிறுவனம் அதே ஷார்க் சீரீஸின் கீழ் 5ஜி ஆதரவுடன் மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. அது லாவா ஷார்க் ப்ரோ 5ஜி (Lava Shark Pro 5G) என்கிற மாடல் பெயரின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சைனீஸ் போன்களின் சேப்டர் க்ளோஸ்.. Lava Agni 4-ஐ தொடர்ந்து Pro 5G!

டெக் பிளாக்கர் ஆன பராஸ் குக்லானி (@passionategeekz) வழியாக கிடைத்துள்ள விவரங்களின்படி, குறிப்பிட்ட 5ஜி மாடல் ஆனது ஐஎம்இஐ (IMEI) தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது - இது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதற்கான அறிகுறியாகும். சரியான வெளியீட்டு தேதி மற்றும் ஷார்க் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்கள் அல்லது வாரங்களில் ஆன்லைனில் வெளிவரக்கூடும்.

லாவா ஷார்க் 2 (Lava Shark 2), லாவா ஷார்க் 5ஜி (Lava Shark 5G) மற்றும் லாவா ஷார்க் (Lava Shark) ஆகிய 3 மாடல்களுக்கு பிறகு, லாவா நிறுவனத்தின் ஷார்க் சீரிஸின் கீழ் - இது நான்காவது மாடலாக அமரும். சில நாட்களுக்கு முன்னர் தான் லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஷார்ட் சீரிஸின் கீழ் லேட்டஸ்ட் ஆக அறிமுகமான லாவா ஷார்க் 2 ஸ்மார்ட்போனின் விலை என்ன? லாவா ஷார்க் 2 இந்தியா முழுவதும் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் அரோரா கோல்ட் மற்றும் எக்லிப்ஸ் கிரே ஆகிய கலர் ஆப்ஷன்களில்.. 4ஜிபி ரேம்+ 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் ரூ.7,500 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் பிளிப்கார்ட்டில் தற்போது ரூ.7,990 க்கு வாங்க கிடைக்கிறது.

லாவா ஷார்க் 2 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: லாவா ஷார்க் 2 ஸ்மார்ட்போன் ஆனது ஹார்ட்வேர் விஷயங்களை எளிமையாக வைத்திருக்கிறது. ஒரு நாட்ச் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.75-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இருப்பினும் ஸ்க்ரீன் ரெசல்யூஷன் HD+ ஆகவே உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை இயக்குவது யுனிசாக் T7250 சிப்செட் ஆகும், இது AnTuTu இல் 375,000 க்கும் அதிகமான மதிப்பெண்களை பெறும் என்று லாவா கூறுகிறது. இது 4GB RAM மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. கூடுதலாக 4GB விர்ச்சுவல் ரேம்-க்கான ஆதரவையும் கொண்டுள்ளது

சாஃப்ட்வேர் பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 இன் க்ளீன் வெர்ஷன் கொண்டு இயங்குகிறது. விளம்பரங்கள் மற்றும் ப்ளோட்வேர் (bloatware) இல்லை. கேமராக்களை பொறுத்தவரை லாவா ஷார்க் 2 ஸ்மார்ட்போன் ஆனது 50 எம்பி ரியர் சென்சார் மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது

கடைசியாக ஷார்க் 2 ஸ்மார்ட்போன் ஆனது 18W சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. மேலும் இது IP54 தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பு, பளபளப்பான ரியர் டிசைன் மற்றும் இலவச டோர் ஸ்டெப் சேவை என இந்த பட்ஜெட்டில் பார்க்காத அம்சங்கள் மற்றும் நன்மையையும் வழங்குகிறது,.

சில நாட்களுக்கு முன்னர் அறிமுகமான லாவா அக்னி 4 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் இது ரூ.22,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ஆகும்.

லாவா நிறுவனம் இந்த விலையை டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு சலுகைகளை உள்ளடக்கிய அறிமுக விலை என்று கூறுகிறது. ஆக சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு பின்னர் இதன் விலை இன்னும் அதிகரிக்கலாம் என்று அர்த்தம். இது பாண்டம் பிளாக் மற்றும் லூனார் மிஸ்ட் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களின் கீழ் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் அமேசான் வழியாக வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava to Launch New 5G Phone Just After Lava Agni 4 5G Launch in India Could be Lava Shark Pro 5G
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X