ரூ. 6,888 விலையில் புதிய போன் வாங்க ரெடியா? ஜனவரி 7ம் தேதி மிஸ் பண்ணாதீங்க..
லாவா நிறுவனம் தனது சமீபத்திய பட்ஜெட் மைய ஸ்மார்ட்போனான லாவா பியூ (Lava BeU) ஆண்ட்ராய்டு கோ வெர்ஷன் ஸ்மார்ட்போனை ஜனவரி 7ம் தேதி அறிமுகம் செய்வதாக இன்று அறிவித்துள்ளது. லாவா பீயு ஸ்மார்ட்போன் பெண்களை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை விபரம் மற்றும் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

லாவா பீயு பெண்களின் தேவைகளை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் கிளாசிக் டிசைன், டயமண்ட்-ஸ்டடட் கேமரா மற்றும் உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு பயன்பாட்டு உடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆன்லைன் வழியாகவும் ஆப்லைன் சிலரை கடைகள் வழியாகவும் வெறும் ரூ. 6,888 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

லாவா பீயு ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஜனவரி 7ம் தேதி மதியம் 12 மணிக்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அறிமுக நிகழ்வு வலைத்தளத்தில் நேரலை செய்யப்படுகிறது. இந்த நேரலை லாவா டிவிட்டர் பக்கம், யூடியூப் சேனல் மற்றும் பேஸ்புக் பக்கம் வழியாக ஒளிபரப்பாகும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

லாவா பீயூ சிறப்பம்சம்
- 6.08' இன்ச் 1560 x 720 பிக்சல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- 1.6GHz ஆக்டா கோர் IMG8322 GPU
- 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் வழியாக 256 ஜிபி வரை ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 10 கோ
- டூயல் கேமரா அமைப்பு
- 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
- 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- எல்இடி ஃபிளாஷ்
- 8 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர்
- 4G VoLTE
- Wi-Fi 802.11 b / g / n
- புளூடூத் 4.2
- GPS GLONASS
- டூயல் சிம்
- மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட்
- 4060 எம்ஏஎச் பேட்டரி



Click it and Unblock the Notifications