அட்றா சக்கை விலையில் 2 புது 5ஜி போன்கள்.. சைனீஸ் போன்களுக்கு செக் வச்ச இந்திய நிறுவனம் லாவா!
இந்திய மொபைல் சந்தையை "ஆட்சி செய்யும்" சைனீஸ் மற்றும் தென்கொரிய பிராண்டுகளின் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன்களை (Budget 5G Smartphones) துவம்சம் செய்யும் நோக்கத்தின் கீழ் இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனம் ஆன லாவா (Lava) அதன் ஸ்டார்ம் சீரீஸின் கீழ் 2 பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.
அது லாவா ஸ்டார்ம் ப்ளே 5ஜி (Lava Storm Play 5G) மற்றும் லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி (Lava Storm Lite 5G) ஸ்மார்ட்போன்கள் ஆகும். சுவாரசியமாக இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே 5ஜி ஆதரவை மட்டுமின்றி - சாம்சங் ஸ்மார்ட்போன்களின் காணப்படும் ரியர் டிசைன் மற்றும் "நம்பகமான" பெர்பார்மென்ஸை வழங்கும் சிப்செட் உடன் வருகின்றன.

குறிப்பாக லாவா ஸ்டார்ம் ப்ளே 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியா டெக் டைமன்சிட்டி 7060 சிப்செட் உடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். இது கடந்த 2023 அறிமுகம் செய்யப்பட்ட லாவா ஸ்டார்ம் 5ஜி ஸ்மார்ட்போனில் காணப்படும் டைமன்சிட்டி 6080 சிப்செட்டை விட நல்ல அப்கிரேட் ஆகும்.
லாவா ஸ்டார்ம் ப்ளே 5ஜி ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன எதிர்பார்க்கலாம்? முன்னரே குறிப்பிட்டபடி லாவா ஸ்டார்ம் ப்ளே 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 7060 சிப்செட்டுடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள நாடுகளில் மீடியாடெக் இன்னும் இந்த செயலியை வெளியிடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
இந்த சிப்செட், ஒரு உலகளாவிய வெளியீட்டு நிகழ்வில் அறிமுகமான மோட்டோ ஜி56 ஸ்மார்ட்போனில் அறிமுகப்படுத்தப்பட்டது. டைமன்சிட்டி 7060 என்பது 2.6GHz கிளாக்ட்டு ஸ்பீட் கொண்ட ஆக்டா-கோர் சிப் மற்றும் 6என்எம்செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. இது IMG BXM-8-256 GPU-வை கொண்டுள்ளது.
பெயரை வைத்தே இது சிப்செட் மீடியாடெக் 7050-ன் "வாரிசு" என்பதை அறிந்துகொள்ள முடியும். இது 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பல ஸ்மார்ட்போன்களில் பேக் செய்யப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டிற்கு ரியல்மி பி1 (Realme P1), ரியல்மி நார்சோ 70 ப்ரோ (Realme Narzo 70 Pro), ஒப்போ எப்27 ப்ரோ பிளஸ் (OPPO F27 Pro Plus) ஆகிய மாடல்களை கூறலாம்
இதுதவிர்த்து லாவா ஸ்டார்ம் ப்ளே 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது LPDDR5 மற்றும் UFS 3.1 ஆகியவற்றை கொண்டிருக்கும், இது மென்மையான மல்டி டாஸ்கிங், வேகமான ஆப் லோடிங் டைம் மற்றும் பட்ஜெட் பிரிவில் சிறந்த கேமிங் அனுபவத்தை உறுதி செய்யும் என்று லாவா கூறுகிறது. இது தவிர, இந்த ஸ்மார்ட்போன்ஒரு நல்ல கேமிங் ஸ்மார்ட்போனை தேடும் இளம் பார்வையாளர்களை இலக்காக கொண்டிருக்கும் என்றும் லாவா கூறுகிறது
லாவா ஸ்டார்ம் சீரீஸ் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? லாவா ஸ்டார்ம் ப்ளே மற்றும் ஸ்டார்ம் லைட் 5ஜி ஸ்மார்ட்போன்களின் இந்தியா விலை விவரங்களை லாவா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் லாவா ஸ்டார்ம் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.13,499 க்கு அறிமுகப்படுத்தப்பட்டதை கருத்தில் கொண்டு, புதிய ஸ்டார்ம் மாடல்கள் ரூ. 15,000 க்கு கீழ் அல்லது ரூ.15,000-ஐ சுற்றிய விலையை கொண்டிருக்கலாம்
நினைவூட்டும் வண்ணம் லாவா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் தான் ரூ.10,000 பட்ஜெட்டில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அது லாவா போல்ட் 5ஜி (Lava Bold 5G) மாடலாகும். லாவா போல்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,499 என்கிற அறிமுக தொடக்க விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும்
லாவா போல்ட் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: லாவாவின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்டில் இயங்குகிறது. இது 6.67-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் ஐபிP64 ரேட்டிங் கட்டமைப்பையும் கொண்டுள்ளது. இது 64 மெகாபிக்சல் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. கடைசியாக 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








