Home
Mobile

அடிச்சு தூக்கும் பட்ஜெட்.. வெறும் ரூ.11,999 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

சீன நிறுவனங்களை தட்டித்தூக்கும் விதமாக லாவா நிறுவனம், வெறும் ரூ.11,000 பட்ஜெட்டில் பக்கா பிரீமியம் டிசைனில் 16ஜிபி ரேம், 33W சார்ஜிங், 1டிபி மெமரி சப்போர்ட் போன்ற மிரட்டலான அம்சங்களுடன் லாவா ஸ்டோர்ம் 5ஜி (Lava Storm 5G) போனை களமிறக்கியிருக்கிறது.

லாவா ஸ்டோர்ம் அம்சங்கள் (Lava Storm Specification): இந்த லாவா போனில் 6.78 இன்ச் (1080 x 2460 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) பன்ஞ் ஹோல் (Punch Hole) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 2.5D கர்வ்ட் டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 396 பிபிஐ மற்றும் 16.7 மில்லியன் கலர் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.11,999 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 எஸ்ஓசி (Octa-core MediaTek Dimensity 6080 SoC) சிப்செட் வருகிறது. இந்த லாவா ஸ்டோர்ம் போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera) கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, எல்இடி பிளாஷ் லைட்டுடன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கேமராவில் எச்டி வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. அதேபோல டைம்-லேப்ஸ் (Timelapse), ஸ்லோவ் மோஷன் (Slow Motion), எச்டிஆர் (HDR), போர்ட்ராய்டு (Portrait), நைட் (Night) போன்ற பீச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த லாவா ஸ்டோர்ம் போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

ரூ.11,999 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

இதற்கு டைப்-சி சார்ஜிங் வருகிறது. இந்த பேட்டரி ஒரு ஃபுல் சார்ஜில் தொடர்ந்து 300 ஹவர்ஸ் ஸ்டான்ட்-பை டைம் கொடுக்கக்கூடியது. இந்த பேட்டரியோடு சேர்த்து 214 கிராம் எடை கொண்டுள்ளது. அதேபோல 8.96 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. இந்த போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor) வருகிறது.

அதோடு பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் டூயல் நானோ சிம் (5G + 5G) சிலாட் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு சிலாட் வருகிறது. இந்த லாவா போனின் கனெக்விட்டியை பார்க்கையில் 5ஜி, டூயல் 4ஜி சப்போர்ட் வருகிறது. அதோடு ப்ளூடூத் வி.5, வை-பை 802 மற்றும் ஓடிஜி வருகிறது.

இந்த லாவா ஸ்டோர்ம் போனில் கேல் கிரீன் (Gale Green) மற்றும் தண்டர் பிளாக் (Thunder Black) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,499ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அறிமுக சலுகையாக ரூ.1,500 பேங்க் டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.11,999 விலைக்கு விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

இந்த லாவா போனை அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்துகொள்ளலாம். வரும் டிசம்பர் 28ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. கம்மியான பட்ஜெட்டில் பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், 16 ஜிபி ரேம், 5ஜி சிப்செட், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் கொண்ட போன் வேண்டுமானால், இந்த லாவா ஸ்டோர்ம் 5ஜி மாடலை ஆப்ஷனில் எடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Storm With 16GB RAM, Dimensity 6080 Sale From December 28 on Amazon Check Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X